Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 17, 2016

நாளை முதல் பழைய நோட்டுக்கு ரூ.4500-க்கு பதில் ரூ.2 ஆயிரம் மட்டுமே மாற்ற முடியும்- சக்தி காந்த தாஸ்


டெல்லியில்  பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்தி காந்த தாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

* நாளை முதல் பழைய நோட்டுக்கு ரூ.4500 க்கு பதில் ரூ. 2 ஆயிரம் மட்டுமே மாற்ற முடியும். வங்கியில் கூட்டத்தை குறைக்கவே பணம் மாற்றுவது குறைக்கபடுகிறது.

*  விளைபொருட்களை விற்கும் போது காசோலை மூலம் பணம் பெறலாம்.

* பயிர்கடனை செலுத்த கால அவகாசம்

* திருமணத்திற்கு வங்கி கணக்கில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை எடுக்கலாம். திருமணம் நடத்தும் தாய் மற்றும் தந்தை கணக்கில் இருந்து ரூ.25 லட்சம் எடுக்கலாம். திருமணத்திற்கு பணம் எடுக்க தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

*  மக்களுக்கு தேவையான பணம் அச்சடிக்கும் பணி இரவு பகலாக நடைபெறுகிறது.

* வங்கி கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் வாரம் ரூ. 25 ஆயிரம் வரை எடுக்கலாம்

* குரூப் சி மத்திய அரசு ஊழியர்கள் ரூ. 10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்

* பதிவு செய்த வர்த்தகர்கள் ரூ. 50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.