Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 7, 2016

"ஜியோ மொபைல் வெடிச்சிடுச்சு...” உமர் அப்துல்லாவின் ட்வீட்டும், ரிலையன்ஸின் பதிலும்!


சாம்சங் மொபைல் நிறுவனத்தின் 'நோட் 7' போன் உலகமெங்கும் படுவேகமாக விற்பனை ஆனது. அதே வேகத்தில் ஆங்காங்கே வெடிக்கத்துவங்கியது. இதனால் ஒட்டுமொத்தமாக அந்த போன் மாடலை அந்த நிறுவனம் திரும்ப பெற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. கடந்த மாதம் வரை விற்பனையான 28 லட்சம் போன்களை சாம்சங் திரும்ப பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பரபரப்பாக விற்பனையாகி வரும் ஜியோ  சிம் பயன்படுத்தக்கூடிய லைஃப்  போன் ஒன்றும் வெடித்துள்ளது.

ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் உதவியாளராக இருப்பவர் தன்வீர் சாதிக். இவர் தான் பயன்படுத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின்  'லைஃப்' போன் வெடித்ததில் தானும் தன் குடும்பமும் மயிரிழையில் உயிர்பிழைத்ததாக ட்விட்டரில் நேற்று இரவு படத்துடன் ட்விட் போட்டிருந்தார். இந்த டிவிட்டை மேற்கோள்காட்டி உமர் அப்துல்லாவும் "இன்னும் கொஞ்சகாலத்துக்கு இந்த ஜியோ மொபைலை நான் பயன்படுத்தமாட்டேன்"  என்று ட்விட்டரில் எழுதவும் இந்திய அளவில் பரபரப்பானது இந்த மேட்டர்.
ஜியோ

உடனடியாக அந்த ட்விட்டுக்கு பதிலளித்துள்ள  லைஃப் நிர்வாகம் " சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். உடனடியாக இதுகுறித்து விசாரிக்கிறோம்." என தெரிவித்தது. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் பற்றி அவ்வப்போது சிலர் புகார் தெரிவித்த போது அது பற்றி மௌனம் காத்த ஜியோ லைஃப் நிர்வாகம் இப்போது கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அதன் பின்னர் இதுபற்றி ரிலையன்ஸ் ஜியோ லைஃப் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவிக்கையில் "சமூக ஊடகங்களில் வந்துள்ள செய்தியை கவனத்துடன் அணுகி, தீவிரமாக இந்த பிரச்னை குறித்து ஆராய்ந்து வருகிறோம். விற்பனையை விட இது போன்றவற்றுக்கே முன்னுரிமை கொடுத்து ஆராய்ந்து வருகிறோம்.  வாடிக்கையாளரின் பாதுகாப்பும் திருப்தியுமே எங்களுக்கு முதல் நோக்கம்" என்றும் "உலகம் முழுவதும் விற்கப்படும் உயர் மாடல் போன்களுக்கு எந்த வகையில் பாதுகாப்பு சோதனைகள் செய்யப்படுகிறதோ, அதே அளவு எங்கள் போன்களுக்கும் செய்யப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விற்பனையாகும் 4ஜி போன்களில் முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பவை ரிலையன்ஸின் ஜியோ லைப் போன் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.