இந்தியாவில், நாசிக் மஹாராஷ்டிரா, திவாஸ் மத்தியப் பிரதேசம், மைசூரூ கர்நாடகா, ஹைதராபாத் ஆந்திரப் பிரதேசம் ஆகிய நான்கு இடங்களில் பணம் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. பணப் புழக்கத்தை அதிகரிக்க இந்த நான்கு இடங்களிலும் 24/7 பணத்தை அச்சடித்தால் கூட வரும் ஏப்ரல் 2017-க்கு முன், பணப் புழக்கம் சீராவது கடினம் என்று இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் (பி.இ.எஃப்.ஐ - BEFI) தெரிவித்திருக்கிறது.
வங்கி வேலைகள் :
பணப் புழக்கத்தை சரி செய்யும் வேலைகளுக்கு இடையில், வங்கிகள் தங்களுடைய பிரதான வேலைகளான கடன்களை கொடுப்பது, கொடுத்த கடன்களை வசூலிப்பது, பணத்தை ஒரு வங்கியில் இருந்து மற்ற கணக்குகள் மற்றும் வங்கிகளுக்கு நெஃப்டி மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் (NEFT & RTGS) மாற்றுவது போன்ற செயல்களை செய்ய முடியாமல் தேங்கி பொதுமக்களுக்கே பெரிய பிரச்னைகளைத் தான் ஏற்படுத்துகிறது.
பிக் பசார் வங்கியா....?
பணப் புழக்க பிரச்னைகளை குறைக்க, இந்திய அரசு பிக் பசாரிடம் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று வெளியிட்ட அறிவிப்பு, அரசு மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மரியாதையை கேள்விக் குறியாக்குகிறது. பணப் புழக்கம் இந்தியாவில் பெரிய பிரச்னையாகத் தான் இருக்கிறது. அதற்காக தனியார் நிறுவனமான பிக் பசாரிடம் புதிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றச் சொல்வதா...? அப்படி என்றால் பிக் பசாரிடம் வங்கி உரிமங்கள் இருக்கிறதா...? என்று காட்டமாக கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

அரசு அலுவலகங்கள் :
பணப் புழக்கத்தை அதிகரிக்க, இந்தியாவின் அரசுத் துறைகளே போதுமானவை. இந்தியாவில் 15,000க்கு மேற்பட்ட ரயில்வே கவுன்டர்கள், 10,000க்கு மேற்பட்ட பி.எஸ்.என்.எல் கிளைகள், 10,000க்கு மேற்பட்ட ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவன அலுவலகங்கள் கிளைகள், 4,000 எல்.ஐ.சி கிளைகள் இருக்கின்றன. இதை எல்லாம் விட 350க்கும் மேற்பட்ட மாவட்ட பிரதான வேளாண் கூட்டுறவு வங்கிகள், 93,000 வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் 6 லட்சம் கூட்டுறவு சங்கங்களில் பரவலாக மாற்ற முடியாத பணத்தையா 258 பிக் பசார் அலுவலகங்கள் மற்றும் கடைகள் மாற்றிவிடப் போகிறது.
எப்படி சரிவரும் :
பணப் புழக்க பிரச்னையின் இக்கட்டான சூழ்நிலையில் கூட்டுறவு வேளாண் வங்கிகளில் பணத்தை மாற்ற முடியாது என்று அறிவித்திருப்பது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை. எப்போதும் வங்கிகளில் வரும் கூட்டத்தை விட 15 மடங்கு நபர்கள் தங்கள் பணத்தை மாற்ற வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் பணத்தை மாற்ற முடியாத நிலை வந்திருப்பதால், வங்கிகளில் இன்னும் கூட்டம் அதிகரிக்கவே செய்யும். மேலும் வங்கிப் பணிகள் தாமதமாகும்.
மூன்றாவது காலாண்டு குறையும் :
வங்கிகளின் சாதாரண வேலைகளை சரி வர செய்ய முடியாத நிலையால், வரும் டிசம்பர் 2016 காலாண்டு முடிவுகள் அத்தனை நன்றாக இருக்காது. இதை காரணமாக வைத்து வங்கிகளை, தனியாருக்குத் தாரை வார்க்க தயாராகிறதா இந்திய அரசு என்கிற சந்தேகம் தோன்றுகிறது. அது மட்டும் இன்றி வாராக் கடன்களுக்கான கெடு காலம் 90 நாட்களில் இருந்து புதிய உத்தரவுகள் பேரில் 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பின்னாளில் வங்கிகளுக்கு பிரச்னைகள் வலுவாக எழலாம், என்று வங்கி ஊழியர்கள் சம்மேளனம் கேள்விகளை எழுப்பி இருக்கிறது
இந்தப் பணப்புழக்க பிரச்னைகள் தீர வேண்டும், என்பதால் நாளை இந்தியா முழுவதிலும் இருக்கும் வங்கிகளில் மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்திருக்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.