தமிழகம் முழுக்க வருமான வரித்துறையின் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. ' மூன்று தொகுதி இடைத்தேர்தல் மட்டுமல்லாமல், அனைத்து வர்த்தக நிறுவனங்களும் கண்காணிப்பில் உள்ளன. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் கணக்கில் வராத பெரும் தொகைகளை 'வெள்ளையாக' மாற்றும் வேலைகள் நடந்துள்ளன' என அதிர வைக்கின்றனர் அதிகாரிகள்.
மத்திய அரசு வெளியிட்ட, ' 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது' என்ற அறிவிப்பால், ஒரேநாளில் தங்கம் சவரனுக்கு 1,400 ரூபாய் வரையில் அதிகரித்தது. சென்னை, மதுரை, சேலம், கோவை உள்பட பல நகரங்களில் நகைக்கடைகளை பூட்டிவிட்டு, உள்ளே வியாபாரம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நேற்று பாரிமுனை உள்பட பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். " மத்திய அரசின் அறிவிப்பு வெளியான தினத்தில் இருந்து எங்களின் கண்காணிப்பை நகைக்கடைகளின் மீது திருப்பினோம். ஏனென்றால், உடனடி முதலீடு என்றால் அது தங்கத்தின் மீதுதான் இருக்கும் என கணித்தோம். அதன்படி, உளவு சொல்பவர்களின் உதவியோடு வடசென்னை பகுதிகளை வலம் வந்தோம். சிம்சன், பாரிமுனை பகுதிகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் மார்வாடிகளை மையமாக வைத்து, பல கோடிகள் புழங்குவதாக தகவல் கிடைத்தது. அதையொட்டியே நேற்று ரெய்டு நடத்தினோம்" என விவரித்த வருமான வரித்துறை அதிகாரி ஒருவர்,
"நேற்று காலை தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து 20 கார்களை வரவழைத்தோம். எங்களின் வழக்கப்படி, இது மிகப் பெரிய ஆப்ரேஷன் இல்லை. ஆனால், வர்த்தகத்தின் போக்கில் ஏற்பட்டுள்ள அசாதாரண மாற்றங்களை குறிவைத்து முழுமையான தகவல்களை சேகரித்தோம். ஒரு நகைக்கடையில் ஆய்வு நடத்தியபோது, அரை மணி நேரத்தில் 100 பவுன் நகைகளை விற்றிருந்தார்கள். இதுகுறித்துக் கேட்டபோது, ' பொதுமக்கள் அரை பவுன், ஒரு பவுன் என வாங்கிச் சென்றார்கள்' என நகைக்கடை உரிமையாளர் பதில் கொடுத்தார். இந்தப் பதிலில் நாங்கள் திருப்தியடையவில்லை. அது முழுக்க கள்ளப் பணத்தைக் கொட்டி, வாங்கியது என தெரிந்து கொண்டோம். இந்தப் பரிவர்த்தனைக்கான ஆதாரத்தை நகைக்கடைக்காரர் கொடுக்கவில்லை. அவர் மீது வருமான வரித்துறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், பல நகைக் கடைகளில் ஒரே நாளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடந்துள்ளன. இது முந்தைய நாட்களைவிடவும், 300 சதவீதம் அதிகப்படியான விற்பனை ஆகும். சில கடைகளில் இருந்து துண்டுச் சீட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த சீட்டில், 'இரண்டு கோடி ரூபாய் கொடுத்து அனுப்பியுள்ளேன். நகைகளைக் கொடுத்து அனுப்பவும்' என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக துண்டு சீட்டுகளில்தான் வியாபாரமே நடந்து வருகிறது. இதுகுறித்து ஆதாரப்பூர்வமான புகார்கள் வந்ததால், ரெய்டுக்குச் சென்றோம்" என்றார் விரிவாக.
"முறைகேடான பணப் பரிவர்த்தனைகளைக் கவனிப்பதற்காக, வருமான வரித்துறையின் புலனாய்வு அமைப்பின் இணை இயக்குநர் ராய் ஜோஸ் தலைமையில் 200 பேர் கொண்ட டீம் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நடக்கும் பரிவர்த்தனைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. நேற்று மட்டும் 25 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசியல் பிரமுகர்களின் செயல்பாடுகள், பெரும் நிறுவனங்களின் வர்த்தகம், சில்லறை வணிகர்களிடம் புழங்கும் தொகைகள் என சல்லடை போட்டு சலித்து வருகின்றன. இதுகுறித்து தினமும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. முழுமையான ஆப்ரேஷன் விரைவில் தொடங்கும்" என அதிர வைக்கிறார் நிதித்துறை அதிகாரி ஒருவர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.