ரூபாய் நோட்டுகள் திரும்பபெறும் நடவடிக்கைக்கு அடுத்தபடியாக தங்கம் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டுவரும் என்ற யூகங்களை கிளம்பியிருக்கின்றன.
உலக அளவில் தங்க இறக்குமதியில் 2ஆவது நாடாக நமது நாடு இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே புள்ளிவிபரங்கள் இருக்கின்றன. கடந்த 2010-ல் 661.7 புள்ளிகளாக இருந்த தங்க இறக்குமதி கடந்த ஆண்டில் 663.1 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இந்திய வீடுகளில் நகைகளாக ஏறக்குறைய 20,000 டன் தங்கம் முடங்கியுள்ளதாக கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். தங்க பத்திரம், தங்க முதலீட்டு திட்டம் என தங்கம் தொடர்பான புதிய திட்டங்கள் மூலம் இந்த தங்கத்தை வெளிக்கொணர மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்த நவம்பர் 8ம் தேதி இரவு முழுவதும் பெரும்பாலான நகைக்கடைகள் இயங்கின. புதிய அறிவிப்பால் குழப்பத்துக்குள்ளான பலரும் தங்க நகைகளை வாங்கிக் குவித்தனர். அதிலும் குறிப்பாக, நவம்பர் 9ம் தேதிக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் தங்கத்தின் அளவு கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.2.5 லட்சத்துக்கு மேலான தொகைக்கு தங்க நகைகள் வாங்குவோர் பான்கார்டு எண்ணை அளிக்க வேண்டும் என்ற அறிவிப்பு ஏற்கனவே அமலில் உள்ளது. இந்தநிலையில், தற்போது தங்கம் வாங்க பான்கார்டு அவசியம் என்று பல நகைக்கடைகள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. கருப்புப்பணம் வைத்துள்ளவர்கள், தங்களது கையிருப்பை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்று அரசு கருதுவதாகவும், இதனால் தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை அதிகரிக்கத் திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.