Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 12, 2016

இந்தியா, ஜப்பான் இடையே அணுசக்தி ஒப்பந்தம்


இந்தியா - ஜப்பான் இடையே அணுசக்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷின்ஷே அபேவை, தலைநகர் டோக்கியோவில் சந்தித்து பேசினார். அப்போது இரு தலைவர்களின் முன்னிலையில், இரு நாடுகளின் வளர்ச்சி தொடர்பான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், பிரதமரும், ஷின்ஷே அபேவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி, இந்தியா - ஜப்பான் இடையே ஏற்பட்டுள்ள அணுசக்தி ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.

இரு நாட்டு ஒப்பந்தங்கள் மேலும் வளர்ச்சிக்கு உதவும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வரும் காலங்களில் இந்தியா - ஜப்பான் இடையே, அணுசக்தி, வேளாண்மை, கலாசாரம், அடிப்படை கட்டமைப்பு, எரிசக்தி மேம்பாடு உள்ளிட்டவை முக்கிய இடம் பெறும் என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.