Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 3, 2016

சென்னையில் பலத்த மழை எச்சரிக்கை தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்புக்குழு


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக சென்னை, கடலூர், தூத் துக்குடியில் கடும் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டது.
சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் 421 பேர் உயிரிழந்தனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதம் அடைந்தன.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு முன்எச்ச ரிக்கை ஏற்பாடுகளை எடுத் துள்ளது. வெள்ளப் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப் படும் பகுதிகளில் செய்ய வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

ஒவ்வொரு பகுதிக்கும் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நிவாரண பணி குழுவில் போலீஸ் உயர் அதிகாரிகளும் இணைக்கப் பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் ஐ.ஜி. அந்தஸ்து கொண்ட போலீஸ் உயர் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத் துக்கு ஐ.ஜி. டேவிட் ஆசீர் வாதம், திருவள்ளூர் மாவட் டத்துக்கு ஐ.ஜி.சாரங்கன் நியமிக் கப்பட்டுள்ளனர். வெள்ள நிவாரணப் பணி களை ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் கூடுதல் டி.ஜி.பி. ஏ.கே.விஸ்வநாதன், ஐ.ஜி.சந்தீப்ராய் ரதோர் தலைமையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்று உஷார்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழு வினரை தயார் நிலையில் நிறுத்த முடிவு செய்துள்ளனர். முதல் கட்டமாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 5 படைப்பிரிவுகளை அழைக்க உள்ளனர்.
அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழு முகாமில் இருந்து அவர்கள் வரவழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு படையிலும் 45 பேர் இருப்பார்கள். அந்த வகையில் முதலில் 225 பேர் வர உள்ளனர்.

வருகிற வெள்ளிக்கிழமை முதல் இவர்கள் சென்னை, கடலூர், தூத்துக்குடி நகரங்களில் தயார் நிலையில் நிறுத்தப்படுவார்கள். இவர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை மீட்க சிறு படகுகளுடன் தயார் நிலையில் இருப்பார்கள்.வெள்ளத்தில் இருந்து ஒவ்வொரு படகு மூலம் சுமார் 10 பேர் வரை மீட்க முடியும். இந்த வார இறுதிக்கு பிறகு மழை நிலவரத்தை பார்த்து விட்டு கூடுதல் படைகளை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.