Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 7, 2016

ஆன்லைன் ஷாப்பிங் மோசடியில் இருந்து தப்புவது எப்படி?..


ஆன்லைன் ஷாப்பிங், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சலுகைகளை அள்ளித்தரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் விற்பனையும் களைகட்டி வருகிறது.

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது இணையம் மூலமே அந்த பொருளாக்கான பணத்தினை செலுத்தவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். வங்கிகள் வழங்கும் இன்டெர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் உள்ளிட்ட முறைகளில் வாடிக்கையாளர்கள் இதற்கான பணத்தினை செலுத்துகின்றனர். இங்குதான் பிரச்னை தொடங்குகிறது ஆன்லைன் பணபரிவர்தனைகளின்போது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளைத் திருடி, மோசடியில் ஈடுபடுகின்றனர். அந்தவகையில் ஹேக்கர்கள் பயன்படுத்தும் சில தந்திரங்களை நாம் காணலாம்.

போலி இணையதளம்:

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பல மோசடிக்காரர்களால் உண்மையான இணையதள தோற்றம் போலவே, போலி இணையதளத்தை உருவாக்கி பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தும் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளின் விவரங்களை எளிதாக திருடுகின்றனர். எனவே இணையதளத்தை பயன்படுத்தும் போது உண்மையான இணையதளமா என்று அறிந்து பின் பரிவர்த்தனை செய்வது நல்லது.

கீ ஸ்ட்ரோக் லாக்கிங்:

கீ ஸ்ட்ரோக் லாக்கிங் என்ற மென்பொருளின் மூலம் மிக தெளிவாக உங்கள் கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங்கின் கடவுச்சொற்கள் போன்ற விவரங்களை பதிவிறக்கம் செய்ய இயலும். இந்த தொழிநுட்பம் நம்மால் கீ போர்டில் டைப் செய்யப்படும் அனைத்து எழுத்துகளையும் தானாக உள்வாங்கி அதன் மூலம் நம்முடைய தரவு மற்றும் பணம் திருடப்படுகிறது.

மால்வேர் மென்பொருள் மூலம் திருட்டு

ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் வங்கிகளின் சர்வர் கணினிகளில் மால்வேர் மென்பொருளை பயன்படுத்தி கிரெடிட் கார்டு தரவுகள் அனைத்தும் திருடப்படுகின்றன.

ஃபிஷிங் மற்றும் விஷ்ஷிங் திருட்டு

ஃபிஷிங் மற்றும் விஷ்ஷிங் தொழிநுட்பத்தின் மூலம் ஸ்பேம் மின்னஞ்சல்கள் வழியாக நம்முடைய தரவுகள் திருட வாய்ப்புள்ளது. இதன் மூலம் கைரேகை அடையாளங்கள், மொபைல் போனில் உள்ள குறுஞ்செய்திகளின் வழியாக ஏடிஎம் ரகசியக் குறியீடு மற்றும் வங்கி கணக்கு எண்கள் திருடப்பட்டு அதன் மூலம் பண பரிவர்த்தனைகள் முடக்கப்படுகிறது.

போலி சிம் மோசடி

போலி அடையாள அட்டைகள் மூலம் வாடிக்கையாளர் பெயரில் போலி சிம் கார்டுகள் வாங்கும் மோசடி ஆசாமிகள், அதன்மூலம் வங்கிகளிலிருந்து பெறப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டுகள் எனப்படும் கடவுச்சொற்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பற்ற மொபைல் அப்ளிகேஷன்கள்

பல அதிகாரமற்ற போலி மொபைல் ஆப்ஸ்கள் மூலம் நம்முடைய ஏடிஎம் பின் நம்பர்கள், வங்கி கணக்கு எண்கள் போன்றவை திருடப்படுகிறது. எனவே ஆப்ஸ்கள் பதிவேற்றம் செய்யும் போது கவனமாக இருந்தால் இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.