தற்போது கூந்தல் பிரச்சனைகள் அதிகரித்துவிட்டதால், பலரும் தங்கள் கூந்தலின் மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அப்படி அக்கறை காட்டுபவர்கள், இரவில் படுக்கும் போது மறந்துவிடுகிறார்கள். ஆம், இரவில் படுக்கும் போது ஒருசில விஷயங்கள் தவறாமல் செய்து வந்தால், முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
பொதுவாக பெண்கள் பலருக்கும் இரவில் படுக்கும் போது, கூந்தலை கட்டிக் கொண்டு படுப்பது நல்லதா என்ற சந்தேகம் எழும். ஆகவே இரவில் படுக்கும் போது கூந்தலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டியவைகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து அவற்றை தவறாமல் தினமும் பின்பற்றி வந்தால், கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
முடியை கட்ட வேண்டாம்
தினமும் நாள் முழுவதும் முடியை கட்டிக் கொண்டு இருந்தால், இரவில் படுக்கும் போது, முடியை லூசாக விட்டு தூங்குங்கள். ஏனெனில் நாள் முழுவதும் கட்டியவாறு இருந்ததால், மயிர்கால்களால் சரியாக சுவாசிக்க முடியாமல், அதன் ஆரோக்கியம் அழியும். ஆகவே இரவில் படுக்கும் போது ப்ரீ ஹேர் விட்டு தூங்கினால், மறுநாள் காலையில் கூந்தல் நன்கு புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக காணப்படும்.
தலை சீவுங்கள்
எப்போதுமே இரவில் படுக்கும் முன், சீப்பு கொண்டு ஒருமுறை தலையை சீவ வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
ஸ்கால்ப்பை மசாஜ் செய்யவும்
இரவில் படுக்கும் முன், கை விரல்களால் ஸ்கால்ப்பை சிறிது நேரம் மசாஜ் செய்து விட வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு, மன அழுத்தம், தலை வலி போன்றவையும் நீங்கும்.
எண்ணெய் தடவவும்
தினமும் இரவில் ஸ்கால்ப்பிற்கு சிறிது எண்ணெய் தடவ வேண்டும். குறிப்பாக கோடையில் இந்த செயலை தவறாமல் செய்ய வேண்டும். இதன் உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியாக இருக்கும்.
முடி வெடிப்பை நீக்கவும்
உங்கள் கூந்தலின் முனையில் அதிக முடி வெடிப்பு இருந்தால், அதனை இரவில் படுக்கும் முன் நீக்குங்கள். இல்லாவிட்டால், வாரம் ஒருமுறையாவது இச்செயலை செய்யுங்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.