ரூ.650 கோடி செலவில் மகளுக்கு ஆடம்பரத் திருமணம் நடத்திய கர்நாடக பாஜக-வின் முன்னாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டிக்குச் சொந்தமான சுரங்க நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.
சுமார் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் இருபிரிவுகளாகச் சென்று ரெட்டிக்குச் சொந்தமான ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம் மற்றும் அசோசியேட் சுரங்க நிறுவனம் ஆகியவற்றில் அதிரசி சோதனை நடத்தினர், அங்கு சிலபல விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
ரெட்டியின் இல்லத்திற்கு அருகில் உள்ள வீரணகவுடா காலனியில் உள்ள அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
நரசிம்ம மூர்த்தி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகளை வருமானவரித்துறையினர் மேற்கொண்டனர். அதாவது பல விசாரணை முகமைகள் மற்றும் சிபிஐ ஆகியவை ஜனார்தன் ரெட்டியின் சொத்துகள் பலவற்றை முடக்கிய பிறகு அவர் எந்த அடிப்படையில் இத்தனை ஆடம்பரமாக திருமணம் நடத்த முடிந்தது என்ற பின்னணியில் நரசிம்ம மூர்த்தி புகார் அளித்ததாகத் தெரிகிறது.
சோதனைகள் நடைபெற்ற போது ஜனார்தன் ரெட்டி பல்லாரியில் இருந்தார். இது பற்றி கருத்து கேட்க அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
மேலும் ரெட்டி மகள் திருமணத்திற்கு உணவு மற்றும் மல்ட்டி மீடியா சேவை வழங்கிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மேலாண்மை நிறுவனங்களிலும் 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு விசாரணைகளையும் மேற்கொண்டு, ஆவணங்கள் சிலவற்றையும் எடுத்துச் சென்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.