அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பால், நாடு முழுவதும் புதிய கரன்சி நோட்டுகள் தட்டுப்பாடு உள்ளதைக் கருத்தில் கொண்டு, அந்த நோட்டுகளை விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரு வாரத்துக்குள் நிலைமையை சீரடையச் செய்வதற்கு மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ம் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் கிடைக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் வங்கிகளில், மக்கள் தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் அன்றாடம் வங்கிகளில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம்-களில் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் நின்று மக்கள் நாளொன்றுக்கு 2,000 ரூபாய் பணம் எடுக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில், சென்னை போன்ற நகரப் பகுதிகளில் ஓரளவு ஏ.டி.எம்-களில் பணம் கிடைத்து வரும் நிலையில், கிராமப்புறங்களில் ரூபாய் நோட்டுகளை விரைந்து கொண்டு சேர்க்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
அதன்படி, ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மையங்களில் இருந்து, சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு புதிய கரன்சிகளைக் கொண்டு செல்வதற்கு, இந்திய விமானப்படை விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
லாரிகள் மற்றும் ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்படுவதால் ஏற்படும் கால விரயம் பெருமளவு குறைக்கப்பட்டு, விரைவில் ரூபாய் நோட்டுகள் முக்கிய விநியோக மையங்களுக்குச் சென்று சேரும் என்று மத்திய அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கரன்சி நோட்டுகள், அச்சடிக்கும் மையங்களில் இருந்து ரூபாய் நோட்டுகள் விநியோக மையங்களுக்கு தற்போது 21 நாட்களில் சென்றடைகின்றன. இந்த கால அளவை 6 நாட்களாக குறைக்கும் வகையில், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால், அடுத்த ஒரிரு வாரங்களுக்குள் கிராமப்புறங்களிலும் பெருமளவு பணத் தட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது.
நகர்ப்புறங்களில் உள்ள நிலைமை ஓரளவு சீரடைந்திருப்பதைப் போன்று, கிராமப்புறங்களிலும் பணத் தட்டுப்பாட்டை போக்கவும், கிராமப்புறங்களில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் ரூபாய் நோட்டுகளை நிரப்பவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்ககப்பட்டிருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, அதிக ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், வங்கிகளுக்கு வரப் பெற்றுள்ள பல கோடி ரூபாயைக் கொண்டு, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், பாதுகாப்புப் படையினருக்கு அதிநவீன ஆயுதங்களை வாங்கவும் பேருதவியாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.
நாடு முழுவதும் சாமான்ய மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வங்கிகளில் அலைந்து திரிந்து அலைக்கழிக்கப்பட்டு வரும் நிலையில், எவ்வித சலனமும் இல்லாமல் மத்திய அரசு அதன் பணிகளை வழக்கம்போல் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
என்று தணியும் சாமான்ய மக்களின் பணத் தட்டுப்பாடு புலம்பல்?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.