Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 24, 2016

அரசு ஊழியர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது!


மத்திய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், ‘அரசு அலுவலகங்கள் மின்னனு முறையில் மட்டும்  பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அதன்படி வரும் 1-ம் தேதி அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்கப்படாது. ஏடிஎம் கார்டு பயன்படுத்துவோருக்கான சேவைக்கட்டணம் டிசம்பர் 31 வரை கிடையாது. மொபைல் பரிவர்த்தனைகளுக்கும் சேவை கட்டணம் இல்லை’, எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் 82,000 ஏ.டி.எம்கள் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். மேலும், சில நாட்களில் அனைத்து ஏ.டி.எம்களும் மாற்றியமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கும் வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.