Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 12, 2016

நின்று கொண்டே பாடம் நடத்த வேண்டுமா? கொதிக்கும் ஆசிரியர்கள்!


திருப்பூர் அரசுப் பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர், வகுப்பறைக்குள் செல்போனை பயன்படுத்தி வந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்புக்கு உள்ளானது. இதனை அடுத்து,  இனி பள்ளிக்கு செல்போன் எடுத்துவரக்கூடாது எனவும் மீறி எடுத்து வந்தால் அந்த போனை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தப் பிறகே வகுப்புகளுக்கு செல்ல வேண்டும்' எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனை அடுத்து தற்போது வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில், ஆசிரியர்கள் இனி நின்று கொண்டுதான் பாடம் நடத்த வேண்டும்; வகுப்பு நேரங்களில் அமர்ந்து பாடம் நடத்தக்கூடாது எனவும், உட்காரவேண்டிய தேவை இல்லாததால் வகுப்பறைகளில் ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நாற்காலிகளை அகற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். " உடல் நலப்பிரச்னைகளால் பாதிக்கப்பட்டோர், மாதவிடாய் காலங்களில் இருக்கும் ஆசிரியைகள் என பலரும் இதனால் பாதிக்கப்படுவர். ஏனெனில், ஒரு பாடவேளை என்பது 45 நிமிடங்கள் ஆகும். 45 நிமிடங்களும் ஆசிரியர்கள் நின்று கொண்டே பாடம் நடத்தினால், ஒவ்வொரு பாடவேளைக்கும் எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தாலே நாளொன்றுக்கு ஒரு ஆசிரியர் சராசரியாக எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் என்பது தெரியும். இது மனிதநேயமற்ற செயல்" என ஆசிரியர்கள் என வேதனை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.