தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள மக்களுக்குத் தரப்படும் 1.26 டன் அரிசியின் விலையை கிலோவுக்கு 8 ரூபாயிலிருந்து 22 ரூபாயாக அதிகரிக்க செப்டம்பர் மாதத்தின் மத்தியில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நவ.1-ல் தமிழகம் அமல்படுத்தாத நிலையில் இந்த விலையேற்றம் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டது. அதாவது அரிசிக்காக மட்டும் 5,200 கோடி ரூபாய் வரை தமிழக அரசு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக ஒருவித நெருக்கடிக்கு ஆளான தமிழகம் மற்றும் கேரள மாநில அரசுகள் நவம்பர் 1-ம் தேதி முதல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன. பதினைந்து வருடங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கு ஒன்றின் கிளைதான் இந்தச் சட்டம். இந்தச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டிய அவசியம் என்ன? இதனைக் கொண்டுவர தமிழகம் தாமதித்தது எதனால்? சட்டம் கொண்டுவரப்படும் நிலையில் இங்கே என்ன பாதிப்பு ஏற்படும்?. சிவில் உரிமைகளுக்கான பொதுக் கூட்டமைப்பின் தலைவரும் உணவுப்பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் தமிழக அரசுக்கு நியமிக்கப்பட்ட ஆலோசகருமான சுரேஷ் கூறுகையில்,
“இந்திய உணவுக்கழகக் கிடங்குகளில் தேவைக்கும் இரண்டு மடங்கு அதிகமாக தானியங்கள் சேமிக்கப்பட்டு வருவது தொடர்பாகப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது, உணவுப் பாதுகாப்பு குறித்துப் பேசப்பட்டது அப்போதுதான். தமிழகத்தில் 2012 மற்றும் 2013-ன் மத்தியில், பதப்படுத்தி பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை மதிய உணவுத் திட்டத்தில் கொண்டுவர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது, அதே சமயம் அது தனியார் நிறுவனங்களால் கையாளப்படும் என அன்றைய காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதில் இருக்கும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி உணவுப்பாதுகாப்புக்கான உரிமை தொடர்பாக ஒரு இயக்கம் உருவாக்கப்பட்டது. அது உருவாக்கிக் கொடுத்ததுதான் உணவுப் பாதுகாப்பு மசோதா.
ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே, இதனை தனியாரா? அல்லது அரசே செயல்படுத்துவதா? என்கிற குழப்பமும் நீடித்தது. இந்த குழப்பம் ஒருபுறம் இருக்க, தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தங்களுடைய மாநில திட்டங்களே நன்றாக செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக ஒரு திட்டம் தேவையில்லை என்று கூறின. 2013-ல் திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஓரளவுக்கு மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் இருந்து. வறுமைக்கோடு வரையறை குறித்த சிக்கல் தொடர்ந்து நீடித்து வந்த தால் சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு கால அவகாசம் கேட்டது. மறுபுறம் பகீர், கணக்கீடாக தமிழகத்தின் ரேஷன் கார்டுகளில் உள்ள மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை 7.80 கோடி என்று இருந்தது, ஆனால் தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7.20 கோடி.

உணவுப்பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வரும் நிலையில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் குறிப்பிட்ட மக்களுக்கான பொது விநியோக முறையே அமலில் இருக்கும். ஏற்கெனவே ரேஷன் கார்டுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை குறித்த சிக்கல் இருப்பதால் இந்த குறிப்பிட்ட மக்களுக்கான பொதுவிநியோக முறை சரியான வகையில் மக்களுக்கான உணவைக் கொண்டு சேர்க்காது. இது மாநில அரசின் அத்தனை திட்டங்களையும் நீட்சியாகப் பாதிக்கும். மற்றொருபுறம் நகரமயமாக்கல் காரணமாக விளை நிலங்கள் குறைந்து வருகிறது. இந்த சூழலில் உணவுப்பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வருவதால், அடுத்த வருடமே தமிழகத்தில் உணவுப் பஞ்சத்தை ஏற்படும் அச்சம் உள்ளது. ஏற்கெனவே, வறட்சிப் பகுதியாகிவிட்ட தமிழகம் அடுத்த வருடமும் வறண்டேதான் இருக்கும் என சூழலியல் ஆய்வுகள் கூறுகின்றன, உணவின்மையும் வறட்சியும் சேர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தைதான் பாதிக்கும்” என்றார்.
மாநில அரசிடம் இதுதொடர்பாக என்ன ஆலோசனைகள் முன்வைக்கப்படும் என்றதற்கு,“மத்திய அரசின் முடிவுகளை முழுவதுமாக உறுதிபடுத்திக் கொள்ளவேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டம் தொடர்பாக இதுநாள் வரை தமிழக முதல்வர்தான் தலையிட்டு வந்தார். இப்போது அவர் மருத்துவமனையில் உள்ளதால் , அடுத்த கட்டமாக யாரிடம் ஆலோசனைகளை எடுத்துச் செல்வது என்கிற சிக்கல் எழுந்துள்ளது” என்றார்.
மக்களுக்கான உணவில் இவ்வளவு அரசியலா?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.