Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 20, 2016

பணத்தடை: நமக்கு தெரிந்தும், தெரியாமலும் போன ஐந்து விளைவுகள்!


1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நடவடிக்கை ஒவ்வொரு இந்தியனையும் ஆழமாகப் பாதித்துள்ளது. கொண்டாட்டம், திண்டாட்டம் என இரு மனநிலைகளில் மக்கள் உள்ளனர். இந்த நடவடிக்கை அமலுக்கு வந்த பிறகு பல பின்விளைவுகளும், எதிர்வினைகளும் நாட்டில் நடந்துள்ளன. அதில் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் போன ஐந்து விளைவுகள் இங்கே..

கைக்கெடிகாரம் அமோக விற்பனை...



மோடியின் அறிவிப்புக்கு பிறகு ஆடம்பர கைக்கெடிகாரங்களில் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.   பணக்கார இந்தியர்கள் தங்களிடம் உள்ள கணக்கில் வராத பணத்தை, ரொலக்ஸ் உள்ளிட்ட கைக்கெடிகாரங்களை வாங்க முயற்சித்து வருகின்றனர். வட மேற்கு மும்பை பகுதியில் உள்ள ஒரு ஆடம்பர கைக்கெடிகார கடையில், ஒரே நாளில் மட்டும் 45 ரோலக்ஸ் கைக்கெடிகாரங்கள் விற்பனையாகியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். வழக்கமாக 45 கைக்கெடிகாரங்கள் என்பது அந்த கடையின் மாத விற்பனை இலக்காம். இதே போல இந்தியா முழுக்க உள்ள ஆடம்பர கைக்கெடிகார கடைகளில்  அமோக விற்பனை நடந்துக்கொண்டிருக்கிறது.

நெடுஞ்சாலைகளில் லாரிகள்..



நாடு முழுவதிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே முடங்கிக் கிடக்கின்றன. உணவுக்கும், லாரிக்கு டீசல் போட பணம் இல்லாமல் டிரைவர்கள் தவிக்கின்றனர். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களும், தொழில் நிறுவனங்களுக்குச் சென்று சேர வேண்டிய சரக்குகளும் 65 சதவிகிதம் சாலை போக்குவரத்தையே நம்பியுள்ளன. லாரிகள் முடக்கத்தால் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம்.

முதியோர்களுக்கு மீண்டும் வேலை..

பொதுத்துறை வங்கிகள் ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர  புதிய தற்காலிக கவுண்டர்களை அமைத்தன. வங்கி ஊழியர்கள் விடுமுறை, இல்லமல் பணியாற்றி களைத்துப்போனதால், தற்காலிக கவுண்டர்களில் பணியாற்ற ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களை அழைத்துள்ளனர். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு போக்குவரத்து மற்றும் உணவு செலவினங்களை வழங்குமாறு அரசு உத்தரவிட்டிருந்ததாம்.
   
10 கிராம் தங்கம் 52,000 ரூபாய்..



பிரதமர் நரேந்திரமோடி  நவம்பர் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மூடப்பட்ட நகைகடைகள் கூட மோடி அறிவிப்புக்குப் பின், மீண்டும் திறக்கப்பட்டு, அதிகாலை 4 மணி வரை நகைகளை விற்பனை செய்துள்ளன. கறுப்புப் பணம் வைத்திருந்தவர்கள் பைகளில் பணத்துடன், நீண்ட வரிசையில் காத்திருந்து நகைகளை வாங்கிச் சென்றுள்ளனர். சில கடைகளில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்த போலிசாரை கூட அழைத்திருக்கிறர்கள். 10 கிராம் தங்கத்தை கிட்டத்தட்ட இரு மடங்கு விலையில் 52,000 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர்.

ஏ.டி.எம்-களுக்கு ஒருமாதம் லீவா? 

 நாட்டில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்களில், புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை, தற்போது உள்ள ஏ.டி.எம் செட்டப்களில்  நிரப்ப முடியாது. இதனால், புதிய நோட்டுக்களை வைக்கும் வகையில்  ஏ.டி.எம் இயந்திரங்களில் மாற்றம் செய்யப்படுகின்றன. தற்போது முக்கிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்-களில் மட்டுமே இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஏ.டி.எம்-களிலும் புதிய தொழில்நுட்பத்தை புகுத்த ஒரு மாதம் ஆகும் எனத் தெரிகிறது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.