நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி, நள்ளிரவு 12 மணியிலிருந்து 500, 100 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அந்த அறிவிப்பால், நாடு முழுவதும் வங்கிகளின் முன் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான மக்கள் பணம் பெற நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். பணத்தட்டுப்பாடு காரணமாக மக்களிடையே குழப்பம் நிலவுகிறது. கியூவில் நின்றவர் மரணம். பணிச்சுமையால் வங்கி ஊழியர் இறப்பு செய்திகளை கேட்க முடிகிறது. சூழலை புரிந்து கொண்டு வங்கி ஊழியர்களும் நேரம் காலம் பார்க்காமல் பணி புரிந்து வருகின்றனர். லக்னோவில் ஊழியர்களின் பணியை பாராட்டி, வயதான பெண் ஒருவர் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் ரோஜா மலர் கொடுத்து பாராட்டினார்.
மகராஷ்டிரத்தில், பிரதமரின் இந்த அறிவிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சலூன் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்யப்படுகிறது. இப்படி அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பும் ஆதரவும் கலந்து காணப்படுகிறது. இந்த நிலையில், கேரளத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் எழுதிய ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் கடவுலூர். சவுத் இந்தியன் வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறார். ஃபேஸ்புக்கில் தற்போதையை நெருக்கடிக்கு வங்கிகளுக்கு மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பு குறித்து வெளியிட்ட பதிவின் தமிழாக்கம் இங்கே...
''முதலில் எங்கள் வங்கியை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பத்து வருட சேவையில் கடந்த பத்து நாட்களில் கடும் நெருக்கடியை சந்தித்தேன். தினமும் வங்கி முன் கட்டுக்கடங்காதக் கூட்டத்தைப் பார்க்கிறேன். காலை 5 மணிக்கே மக்கள் குவிந்து விடுகிறார்கள். அவர்களது கையில் பழைய நோட்டுகளை பார்க்க முடிகிறது.
வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், முடியாதவர்கள், விவசாயிகள், என ஒவ்வொருவரையும் கடந்துதான் தினமும் நான் வங்கிக்குள் நான் நுழைகிறேன். கீழ்லிசேரி கிராமத்தில் சவுத் இந்தியன் வங்கியை தவிர்த்து ஒரே ஒரு கூட்டுறவு வங்கிதான் உள்ளது.சுற்று வட்டாரத்தில் உள்ள 7,8 கிராம மக்களுக்கு எங்கள் வங்கிதான் முக்கியமானது. திடீரென 500, ஆயிரம் செல்லாது என்ற அறிவிப்பு கையில் 100 ரூபாய் நோட்டுகள் இல்லாததும் மக்களை பெரிதும் பாதித்திருக்கிறது. அதனை நாங்களும் அதனை உணர்ந்திருக்கிறோம்.

ஆனால், இந்த சூழலில் எங்கள் வங்கி முன்பு எப்போதும் இல்லாத சில விஷயங்களை பார்க்கிறேன். கூட்டத்தில் முதியவர்களுக்கு இளைஞர்கள் உதவுகின்றனர். வரிசையை கட்டுப்படுத்துகின்றனர். பிரதமரின் அறிவிப்பில் இருந்தே நாங்கள் ஓவர் டைம்தான் பார்க்கிறோம். நீங்கள் நீண்ட கியூவில் நிற்பது போலவே கால் கடுப்பது போலவேத்தான் எங்களது பணியும் கடினமாக இருக்கிறது. எங்களால் உங்களது ஒவ்வாருவரின் ஆசையையும் உடனே பூர்த்தி செய்து விட முடியாது. ஆனாலும் ஊனமுற்றவர்கள், பார்வையற்றவர்கள் வரிசையில் இருந்தால், உடனடியாக வேண்டிவற்றை செய்து கொடுக்கிறோம்.
இந்த சமயத்தில் எனது ஊழியர்களையும் அவர்களது பணிகளையும் மறந்து விட முடியாது. தினமும் குவியும் நோட்டுகளை எண்ணி முடித்து கணக்குகளை சரிபார்ப்பதற்கும் மணி பன்னிரென்டைத் தொடுவதற்கும் நேரம் சரியாக இருக்கிறது. ஆனாலும், இப்போதுதான் எனது வேலையை எப்போதையும் விட அதிகம் நேசிப்பதாக உணருகிறேன்!''

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.