‘‘நாட்டில் பணமுடக்கப் பிரச்னை ஏற்பட்டிருக்கும் சூழலில், குஜராத்தில் நடந்த கலவரம் பற்றிப் பேசுவது தேவையற்றது. ஆனால், இரண்டுக்கும் பின்னணியில் பொதுவாக ஒரே நபரே இருக்கிறார் என்னும்போதும் அதைப்பற்றி பேசுவது தேவையாகிறது’’ என்கிறார் ஸ்ரீகுமார். இவர், குஜராத் மாநிலத்தின் காவல் துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். 2002-ல் குஜராத்தில் கோத்ரா ரயில் சம்பவம் மற்றும் அதைத் தொடர்ந்து எழுந்த குஜராத் கலவரம் இவற்றின் மீது சட்டப்படி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் குஜராத் காவல் துறையை அரசு தடுத்ததாக அப்போதைய மோடி அரசுக்கு எதிராக தனது அறிக்கைகளைத் தாக்கல் செய்தவர். கூடுதல் காவல் துறை இயக்குநராக இருந்த அவருக்கு, இந்தச் செயலை அடுத்து பதவி உயர்வு மறுக்கப்பட்டது. குஜராத்தில் நிகழ்ந்த தொடர் சம்பவங்கள் பற்றி ‘Gujarat - Behind the curtains’ என்று, தான் எழுதிய புத்தகத்தை தமிழகத்தில் நிகழ்ந்த மதச்சார்பற்றோர் கூட்டமொன்றில் அறிமுகப்படுத்திப் பேசினார் ஸ்ரீகுமார்.

”தன்னை முதன்மைப்படுத்தவே இப்படிச் செய்கிறார்”
‘‘தனது புத்தகத்தில் திருக்குறளைத்தான் முழுக்கக் கோடிட்டுக் காட்டியிருப்பதாகவும், திருக்குறளில் இருப்பதுபோல்தான் எந்த ஓர் அரசியலமைப்பும் செயல்படவேண்டும் என்றும், தேசியப் புத்தகமாக அறிவிப்பதென்றால் திருக்குறளைத்தான் அறிவிக்கவேண்டும்’’ என்றும் பேசிய அவர், “பிரதமர் மோடி எல்லா இடங்களிலும், தான் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என நினைக்கிறார். 2002-ம் ஆண்டு கலவரம் தொடங்கி இன்று நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கும் பணப் பிரச்னை வரை நடந்துவந்திருக்கும் சம்பவங்களின் பின்னணியிலும் அவரின் இந்த ஓர் எண்ணம் மட்டும்தான் இருந்திருக்கிறது. கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களைப் புதிதாக இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டுமா? பிரதமருக்கு அவர்கள் யார் என்று முன்னமே தெரியாது என அரசு கூறினால், அதனை மக்கள் அப்படியே நம்பிவிடும் அளவுக்கு முட்டாள்கள் இல்லை” என்றார்.
நானே செயல்படுத்தியிருப்பேன்!
மேலும், ‘‘அரசியல் சட்டம் தெரிந்த யாராக இருந்தாலும் கறுப்புப் பணத்தை எப்படி மீட்டுக் கொண்டுவருவது என எளிதில் தீர்வு கண்டுவிட முடியும். அதாவது, சுவிஸ் வங்கியுடனான இந்தியத் தொடர்புகளை நிறுத்திக்கொள்கிறோம் என்றும் அப்படித் தொடர்புகளை நிறுத்திக்கொள்ளும் நிலையில் அவர்களது வங்கியில் உள்ள இந்தியக் கணக்குகளை உடனடியாக முடக்கி, அந்தப் பட்டியலை மட்டும் தருமாறு அரசின் பொருளாதாரச் செயலர் கையொப்பமிட்ட கடிதம் ஒன்றை சுவிஸ் வங்கிக்கு அனுப்பினாலே போதுமானது. நான் பொருளாதாரச் செயலாளராக இருந்தால் இதைத்தான் செய்திருப்பேன். அதுமட்டுமில்லை... மோடி தொடங்கி, எங்கள் காவல்துறையில் இருக்கும் கடைமட்ட கான்ஸ்டபிள் வரை அரசியலமைப்புச் சட்டத்தின் செயல்பாடு அறிந்த அனைவருக்குமே இதுதான் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் தீர்வு எனத் தெளிவாகத் தெரியும். ஆனால், இன்று அவர் செய்திருப்பதோ முற்றிலும் வேறு. முழுக்க முழுக்க மோடி என்கிற அடையாளத்தை முன்னிறுத்தவே அவர் இப்படிச் செய்திருக்கிறார். அரசின் இந்தத் திட்டம் வெற்றியா... தோல்வியா என விவாதிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், இன்று நாட்டில் பாதிக்கப்பட்டிருக்கும் கடைசி குடிமகன் வரை அவரைப் பற்றித்தான் பேசுகிறான். அவருக்குத் தேவையும் அதுதான். 2002-ல் குஜராத்தில் நிகழ்ந்தது இன்று தேசிய அளவில் வேறு விதமாக நடக்கிறது” என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.