Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 21, 2016

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களையும் பாதித்த ரூபாய் நோட்டு விவகாரம்


ரூபாய் நோட்டு விவகாரத்தால் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து 18 நாட்கள் கடந்துவிட்டன. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு வழங்கவேண்டிய தினசரி படித் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் நடப்பு டெஸ்ட் தொடரில் ஒவ்வொரு போட்டிக்கும் ரூ. 58.6 லட்சம் (தோராயமாக) ஒதுக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கான தினசரி வழங்கப்பட வேண்டிய படி சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அவர்களுக்கு தினசரி வழங்கப்படும் செல்லக்கூடிய ரூபாய் நோட்டுகள் எண்ணிகையும் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. இந்திய-இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தினசரி செலவுகளுக்காக அந்நாட்டு வீரர்களுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் தலா ரூ.4,200 வழங்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.