Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 7, 2016

டொனால்டு டிரம்ப்பை அவசர அவசரமாக காப்பாற்றிய சீக்ரெட் சர்வீஸ்


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் டொனால்டு டிரம்ப், நேற்று மாலை நெவடா  நகரில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  டிரம்ப்பிற்கு எதிராக மர்ம நபர் ஒருவர் கோஷம் எழுப்பியதை தொடர்ந்து, அவரிடம் துப்பாக்கி  உள்ளது என்றும் அவர் டிரம்ப்பை கொலை செய்ய வந்தவர் என்றும் கருதி, பதறிப்போன டிரம்ப்பின் பாதுகாவலர்கள், டிரம்ப்பை மேடையில் இருந்து அவசர அவசரமாக அழைத்துச் சென்றனர்.




மேலும் ஒரு பாதுகாவலர், மர்ம நபரிடம் துப்பாக்கி உள்ளது என கூச்சல் எழுப்பி, கூட்டத்தில் பெரும் குழப்பத்தை உருவாக்கிவிட்டார். அந்த நபரை சோதனை செய்ததில் அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை. மேலும் 'Republicans Against Trump' என்னும் பதாகை மட்டுமே அவரிடம் இருந்துள்ளது . பாதுகாவலர் அவசரப்பட்டு துப்பாக்கி என கோஷமிட்டதால், குழப்பம் ஏற்பட்டு டொனால்டு டிரம்ப்பை கொலை செய்ய முயற்சி செய்ததாக உலகம் முழுவதும் செய்தி பரவிவிட்டதாக அமெரிக்க காவல்துறை செய்தி வெளியிட்டது. 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.