ஃபேஸ்புக். இது நெட்டிசன்களின் கையில் உலாவரும் டெக்னாலஜி களம். இந்தியாவில் உள்ள 19.5 கோடி ஃபேஸ்புக் பயனாளிகளில் கிட்டத்தட்ட 40% பேர் பெண்கள். ஃபேஸ்புக் மூலம் உலகப் புகழ் அடைந்தவர்களும் உண்டு. அதே நேரத்தில், தாங்கமுடியாத மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டவர்களும் உண்டு.
காலையில் பல் துலக்குவதில் ஆரம்பித்து இரவு தூங்கப் போகும் வரை, குட்மார்னிங் டூ குட்நைட் என ஒருவரின் எல்லா செயல்களும் ஸ்டேட்டஸ் மற்றும் செல்ஃபிகளாக ஃபேஸ்புக்கில் பதியப்படுகின்றன. ஃபேஸ்புக் என்பது, கிட்டத்தட்ட ரகசியமற்ற டைரிதான்!
ஃபேஸ்புக்கில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருப்பது பொதுவான ஒரு வெளிதான். ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வந்துவிழும் லைக்ஸ்களில்தான் மேஜிக் இருக்கிறது. 'குட்மார்னிங்' என்கிற மேசேஜை ஓர் ஆண் பதிந்தால் கிடைக்கும் லைக்ஸ்களைவிட, பெண் பதிந்தால் வந்து விழும் லைக்ஸ் தாறுமாறாக இருக்கும். முகநூலின் ப்ளஸ், மைனஸ் என்ன? பெண்களுக்கு வந்து விழும் ஃபேஸ்புக் லைக்ஸ் என்னவெல்லாம் செய்யக்கூடும்? ஆன்லைன் ஆக்டிவ் கேர்ள்ஸிடமே அனுபவம் கேட்டோம்...

சஞ்சனா, கல்லூரி மாணவி

ப்ளஸ்: ஃபேஸ்புக் ஒரு பொழுதுபோக்குத் தளம். நம் நண்பர்களை தொடர்ந்து ஃபாலோ செய்ய இது உதவியாக இருக்கிறது. மேலும், சின்னதாகத் தொழில் ஆரம்பிப்பவர்களும் இதன் மூலம் பெரிய விளம்பரம் பெற முடிவது சிறப்பு.
மைனஸ்: நம் பாஸ்வேர்டு திருடப்பட்டு அக்கவுன்ட் ஹேக் செய்யப்படலாம் என்பதில் ஆரம்பித்து, முகநூலின் மைனஸ் அம்சங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டேதான் வருகின்றன. குறிப்பாக, பெண்கள் என்ன பதிவிட்டாலும் லைக்ஸ் குவிகிறதெனில், பெண்களின் ஒவ்வொரு போஸ்ட்டையும், புகைப்படத்தையும் அந்த லைக்ஸ் கூட்டம் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கிறது.
பொதுவாக, நூறு பேரில் ஒருவர், இருவர் கெட்டவராக இருக்கலாம் என்று வைத்துக்கொள்வோம். எனில், வந்து விழும் 300+ லைக்ஸில் எத்தனை பேர் வில்லங்கமானவர்கள் என்று யார் அறிவார்கள்? நாம் ஃபேஸ்புக்கில் பதியும் புகைப்படங்கள், நொடியில் அவர்கள் மொபைலில் சேமித்து வைக்கப்படலாம். @காஃபி ஷாப், தியேட்டர், பார்க், பீச் போன்ற பதிவுகளை இடும்போது, உடன் குவியும் 100 லைக்ஸ். அதில் ஒருவர் அந்த இடத்துக்கு அருகிலேயே இருக்கலாம். 'அட, போய் பார்க்கலாம்' என்று கிளம்பிவரலாம். விபரீதம் அந்தப் புள்ளியில் ஆரம்பிக்கலாம். எனவே, அதிகம் லைக்ஸை கிடைப்பது லைக் செய்யவேண்டிய விஷயமில்லை கேர்ள்ஸ்!
ஸ்ரீதேஜா, கல்லூரி மாணவி

ப்ளஸ்: நம் நண்பர்களுடன் உரையாடவும், புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்ளவும், அவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் மிகவும் உதவுகிறது முகநூல். மிக முக்கியமாக மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் கிடைக்கும் நட்பு, அவர்களின் கலாச்சாரம் மற்றும் அந்நாட்டின் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொள்ள உதவுகிறது. தினமும் செய்திகளை டிவி, பேப்பரில் அறிந்துகொள்வதைவிட, முகநூலில், மொபைலிலேயே அறியமுடிகிறது.
மைனஸ்: ஃபேஸ்புக் பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் புதிய விஷயங்களை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் அதில் அதிக நேரத்தைச் செலவிட்டோம். ஆனால் இன்று தேவையின்றி அதில் நேரத்தை வீணாக்கும் அளவுக்கு அதற்கு அடிமை ஆகிவிட்டோம். எங்கேயோ இருக்கும், யார்யாரிடமோ உரையாடுவதில், நம்மைச் சுற்றியிருக்கும் நிஜ உலகத்தை மறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இப்படி விர்சுவல் உலகத்தில் கனெக்ட் ஆகி, ரியல் உலகில் டிஸ்கனெக்ட் ஆகியிருக்கும் இந்நிலை ஆரோக்கியமானதல்ல. மேலும், யார் அதிக லைக்ஸ் வாங்குவது என்ற மறைமுகப் போட்டியும் இங்குண்டு. நம் நேரத்தில் இருந்து பாதுகாப்புவரை, அந்தப் போட்டியில் நாம் பலி கொடுக்கும் விஷயங்கள் நிறைய.
அனோஷ்கா , கல்லூரி மாணவி

ப்ளஸ்: முகநூலில், ஒரு செய்தி, சம்பவம் குறித்த பலரின் பார்வைகளை, கருத்துகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. புதிதாகத் தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு இதில் சுலமபாக விளம்பரம் செய்ய முடிகிறது. ஒரு விஷயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, இது சிறந்த வெளியாக இருக்கிறது.
மைனஸ்: நமக்கு பல புதிய நண்பர்கள் கிடைத்தாலும், அவர்களில் எத்தனை பேர் ஆபத்தானவர்கள் என்பது தெரியாது. இதனால் நாம் பதிவேற்றும் போஸ்ட்கள் மற்றும் புகைப்படங்கள் எல்லாம் அவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பிருக்கிறது. மேலும் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் ஆரம்பிக்கும்போது நாம் சம்மதிக்கும் அதன் 'டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்' நம் ப்ரைவஸியைச் சுத்தமாகப் பறித்து, முகநூலை நாம் இலவசமாகப் பயன்படுத்தவில்லை என்பதைப் புரியவைக்கிறது.
பூஜா, கல்லூரி மாணவி

ப்ளஸ்: நான் ஒரு மாடல் என்று வைத்துக்கொள்வோம். நான் கலந்துகொள்ளும் ஃபேஷன் ஷோக்கள் மற்றும் என் போர்ட்ஃபோலியோ புகைப்படங்களை முகநூலில் அப்லோடு செய்யும்போது, அதன் மூலம் எனக்குக் கிடைக்கப்பெறும் வாய்ப்புகள் விரியும். அடுத்ததாக, ஃபேஸ்புக்கில் ஒரு ஹாஷ்டாக் உருவாக்கி, அதன் மூலமாக விழிப்புஉணர்வு ஏற்படுத்த முடியும் என்பது வரவேற்கத்தக்கது. எனக்கு வந்து விழும் ஒவ்வொரு லைக்ஸ்க்கும் ஒரு வேல்யூ இருக்கிறது.
மைனஸ்: ஃபேஸ்புக் விளம்பரங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருக்கிறது. ஒரு போஸ்டை க்ளிக் செய்தால், அதற்குச் சம்பந்தமில்லாத, வில்லங்கமான வேறொரு பக்கத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஆபத்தும் இருக்கிறது. அடுத்ததாக, நம் சமூகக் கோபத்தை முகநூல் ஜஸ்ட் ஒரு போஸ்ட் மூலம் வடித்துவிடுவது வருத்தமானது. ஒரு அநீதி நடக்கும்போது, அதற்கான நம் எதிர்ப்பை எல்லாம் ஒரு போஸ்ட்டில் கொட்டி ஃபேஸ்புக்கில் ஒட்டிவிட்டு, அதற்கு ஒரு 100 லைக்ஸும் கிடைத்துவிட்டால், நம் சமூகப்பொறுப்பு நிறைவேறிவிட்டதான ஒரு நிம்மதி நமக்குக் கிடைத்துவிடுவது துரதிர்ஷ்டம். இதனால் களத்தில் போராடும் குணம் அற்றுப்போகிறது. இ-போராளிகள் பெருகி என்ன பயன்?
சோனியா, ஊடகவியலாளர்

ப்ளஸ்: நம் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்துகொள்ளும் தளமாகவும், அந்த அழகான நினைவுகளை நம் பதிவுகள் மூலம் காலவாரியாக மீட்டெடுத்து ரசிக்கவைக்கும் தளமாகவும் முகநூல் இருக்கிறது. நம் கருத்துகளை நாம் விரும்பும் நேரத்தில் தடையின்றி சொல்ல முடிகிறது. வர்த்த்கரீதியாகவும் தனிநபர் வளர்ச்சிக்கும் பேஸ்புக் உதவுகிறது.
மைனஸ்: லைக்ஸ் போதை, நம் நேரத்தை அபகரிக்கும் அவஸ்தை. ஒரு போஸ்டோ புகைப்படமோ பதிந்தவுடன், அதற்கு எத்தனை லைக்ஸ் வந்திருக்கிறது என்ற எண்ணம், அந்த நாள் முழுவதிலும் அவ்வப்போது நம்மை முகநூலுக்கு இழுத்துச் சென்று நம் நேரத்தை வீணாக்கும். மேலும், ஒருவர் நம் புகைப்படத்தை லைக் செய்யும்போது, அவர் நட்பு வட்டத்தில் இருப்பவருக்கும் லைக்ஸ் செய்தவரின் தகவல் போய்ச் சேருவதால், பெண்கள் பலரும் இதனால் தேவையற்ற மனச்சோர்வை அடைவதையும் பார்க்க முடிகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.