மதுரையை அடுத்துள்ள கீழடி தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் இடம் என்பதைத் தாண்டி இப்பொழுது தமிழக அரசியலில் முக்கியமான விசயமாக மாறி வருகிறது.
அகழ்வாராய்ச்சி பணிகள் நடக்கும் நிலத்தின் ஒப்பந்தம் முடிவுற்றதால் அகழ்வாராய்ச்சி குழிகள் மூடப்பட்டதும், அங்கே கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் மைசூரில் உள்ள இந்திய அகழ்வாராய்ச்சி மையத்திற்கு எடுத்து செல்லப்பட இருப்பதாகவும் வெளியான தகவல்கள் தமிழ் ஆர்வலர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. எதிர் கட்சிகளும் கீழடி தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று கீழடிக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் வருகை புரிந்தார்.இவருடன் அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை தொகுதி எம்.பி செந்தில்நாதன் மற்றும் சிவகங்கை ஆட்சியர் மலர்விழி உடன் வந்தனர்.
மூடப்பட்ட அகழ்வாராய்ச்சி இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு கீழடி அகழ்வாராய்ச்சி குழுத் தலைவர் திரு.அமர்நாத் மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் 1.30 மணி நேரம் கீழடி தொடர்பாக உரையாடினார். அகழ்வாராய்ச்சியில் தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களை ஆவலுடன் பார்வையிட்டார்.

அகழ்வாராய்ச்சி குழுவினரின் கோரிக்கைகளை கேட்டுவிட்டு கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்ந்து நடைபெற தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று உறுதியளித்தார். ஏற்கனவே தமிழக அரசால் 72 சென்ட் நிலம் கீழடி அகழ்வாராய்ச்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும். மேலும் 2 ஏக்கர் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
"இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை மைசூருக்கு அனுப்ப மறுப்பது சரியல்ல, அங்கே உள்ள ஆய்வுக்கூடத்தில்தான் நம் தொல்பொருள்களை துல்லியமாக ஆய்வு செய்து உலக அரங்கில் அறிக்கைகளை சமர்பிக்க முடியும்" என்று மாஃபா.பாண்டியராஜன் கூறினார்.
மத்திய அரசால் 44 தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் அவைகளில், 39 அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்ற தமிழகத்திற்கு ஒரு அருங்காட்சியகம் மட்டுமே மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது, இதைப்பற்றி மத்திய அரசிடம் முறையிட்டு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.
இப்பொழுது வரை தமிழகத்தின் அனைத்து கட்சிகளுக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி நடைபெற வேண்டும் என்பதே ஆசை. ஆனால் இந்த ஆசை இடைத்தேர்தல் தாண்டியும் நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.