ஆமதாபாத் நாடு முழுவதும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கி, ஏ.டி.எம்., வாசலில் மக்கள் காத்துக்கிடக்கின்றனர்.
ஆனால் குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தினர் பணத்தை கையில் வாங்குவதோ; 'பாக்கெட்டில்' போடுவதோ இல்லை. இங்கு எல்லாமே 'டிஜிட்டல்' மயம் தான். இந்த கிராமத்தில் 'கேபிள் ஆப்பரேட்டர்' ஒருவர் கோதுமை, உருளைக்கிழங்கு, 'சிப்ஸ்' என 200 ரூபாய்க்கு நேற்று பொருட்கள் வாங்கினார். அவருக்கு ரூபாய் பிரச்னையே எழவில்லை. அவரது அலைபேசியை எடுத்து ஒன்றிரண்டு 'டச்'களில் அதற்கான தொகையை கடைக்காரரின் வங்கிக்கணக்கில் செலுத்தி விட்டார்.
அதே போல இவர் கேபிள் பணம் வசூலிக்க மக்களை தேடி செல்வதில்லை. மக்கள் தங்களது அலைபேசி மூலமாக இவரது வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவர். இங்கு 10 ரூபாய்க்கு மேல் பணபரிவர்த்தனை வங்கி மூலமே செய்யப்படுகிறது. குஜராத்தின் ஆமதாபாத் அருகே அகோதரா கிராமம்தான் இந்த பெருமைக்கு உரியது.
பிரதமர் மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியால் தத்தெடுக்கப் பட்டு, நாட்டின் முதல் 'டிஜிட்டல்' கிராமமாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த கிராமத்தில் 220 குடும்பங்களில் 1200 பேர் உள்ளனர். அனைத்து குடும்பத்தினரும் வங்கிக்கணக்கு வைத்துள்ளனர்.
அதே போல வங்கிக்கணக்குடன், அலைபேசி எண் இணைக்கப்பட்டு, 'இ-பேங்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பண பரிவர்த்தனை அனைத்தும் வங்கி மூலமே நடக்கிறது. வணிகத்தில் ரொக்கம் பயன்படுத்துவதில்லை.இங்குள்ள பள்ளிகளும் 'டிஜிட்டல்' மயம் ஆக்கப்பட்டுள்ளன. 'கம்ப்யூட்டர்' வழியாகவே பாடம் நடத்தப்படுகிறது.
கிராமம் முழுவதும் இலவச 'வை-பை' வசதி உள்ளது. விளைவிக்கும் விவசாய பொருட்கள் கூட்டுறவு மையத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கான தொகை அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதனால் எவ்வித முறைகேடுக்கும் வாய்ப்பில்லை.
ஆதரவற்ற விதவைகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியமான 800 ரூபாயை பெறுவதற்கு, 70 ரூபாய் கட்டணத்தில் மாவட்ட தலைநகருக்கு சென்று வந்தனர். தற்போது இது, வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
இந்த கிராமம் முக்கிய நகரங்களுடன் இணையும் வகையில் சாலை வசதி உள்ளது. சமூக பொருளாதார தன்னிறைவை ஓரளவுக்கு எட்டியுள்ளது. இந்தியாவில் உள்ள ஆறு லட்சம் கிராமங்களுக்கு, 'அகோதரா' முன்னுதாரணமாக திகழ்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.