Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 20, 2016

4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!


தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

தஞ்சாவூரில் 69.02 சதவீத ஓட்டுகளும், அரவக்குறிச்சியில் 81.92 சதவீத ஓட்டுகளும், திருப்பரங்குன்றத்தில் 70.19 சதவீத ஓட்டுகளும், நெல்லித்தோப்பில் அதிக பட்சமாக 85.76 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் 89 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனால், தமிழகத்தில் உள்ள 812 வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர். முக்கியமாக, மூன்று தொகுதிகளில் உள்ள 812 வாக்குச்சாவடி மையங்களும் வீடியோ மூலம் நேரடியாகக் கண்காணிக்கப்பட்டது. அதேபோல், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் 26 வாக்குச்சாவடியில் 31,336 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.



இன்று வாக்குப் பதிவு நடைபெற்றதைத் தொடர்ந்து, வரும் 22-ம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. தஞ்சை தொகுதி ஓட்டுகள் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியிலும், அரவக்குறிச்சி தொகுதி ஓட்டுகள் கரூர் குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குகள் மதுரை மருத்துவக் கல்லூரியிலும், நெல்லித்தோப்பு தொகுதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரி பாரதிதாசன் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. இதனிடையே பதிவான வாக்குகள் எண்ணும் இடங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகத் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்றபோது, தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, 2 தொகுதிகளிலும் தேர்தல் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் உயிரிழந்தார். இதனால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

புதுவையில் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதலமைச்சர் ஆனதால், அவர் எம்.எல்.ஏ. ஆகும் வகையில் நெல்லித்தோப்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அந்த தொகுதியையும் சேர்த்து மொத்தம் 4 தொகுதிகளிலும் வெற்றிகரமாக இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.