Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 21, 2016

வங்கிகளில் கூட்டம் குறைந்தது ஏன்? சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி விளக்கம்


வங்கிகளில் கூட்டம் குறைந்தது ஏன் என்பது குறித்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி விளக்கம் அளித்துள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி திடீரென அறிவித்ததோடு, இந்த நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளுக்கு படையெடுத்தனர். முதலில் 4000 ரூபாய் மாற்றிக்கொள்ளலாம் என்றும் பின்னர் 4500 ரூபாய் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது மத்திய நிதியமைச்சகம். பின்னர், 2000 ரூபாய் மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு அனுமதி அளித்தது நிதியமைச்சகம். மேலும் பணம் மாற்ற வருபவர்களுக்கு கை விரலில் மை வைக்கப்படும் என்று தெரிவித்தது. இதனால், வங்கிகளில் கூட்டம் குறைந்தது. பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். பின்னர் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து ஏடிஎம்மில் ஒரு நாளைக்கு 2000 ரூபாய் பணத்தை எடுத்து வருகின்றனர் பொதுமக்கள்.

இந்த நிலையில் வங்கிகளில் கூட்டம் குறைந்தது ஏன் என்பது குறித்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரி பார்த்திபன் இன்று விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரலில் மை வைக்கத் தொடங்கிய பிறகு வங்கிகளில் பொதுமக்கள் கூட்டம் குறைந்துள்ளது. 4 மாதமாக செயல்பாட்டில் இல்லாத வங்கி கணக்குகளில் 500, 1000 ரூபாய்  நோட்டுகள் செலுத்தி வருகின்றனர்.  6 மாதமாக செயல்படாமல் உள்ள வங்கி கணக்கை மீண்டும் புதுப்பிக்க ஆதார் எண், பான்கார்டு அவசியம் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.