ஜனதா அரசின் போது, ஜனவரி 16, 1978-ல் அனைத்து வானொலி நிலையங்கள் வழியாகவும் மக்களிடம் உரையாற்றினார் அப்போதைய பிரதமர் மொராஜி தேசாய். ‘அரசு சார்பில் புழக்கத்தில் விடப்பட்ட 1000, 5000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் செல்லாது ‘ என அறிவித்தார். இதனால் அப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 1970-ல் வான்ச்சு கமிட்டி கொடுத்த பரிந்துரையை, 1978-ல் பிரதமர் மொராஜி தேசாய் ஏற்றுக்கொண்டார். ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி ஒப்புதல் தந்தபின்னர் மொராஜி அறிவித்தார். ஆனால் கறுப்புப் பணம் எவ்வளவு இருக்கிறது எனத் தெரியாத காலகட்டத்தில் இப்படியாக பணத்தின் மதிப்பினை செல்லாது என அறிவிப்பது சாமானிய மக்களையும் பாதிக்கும். மேலும் இப்படியான சட்டம் கொண்டுவருவதால் கறுப்புப் பணம் குறையும் என நம்புவதும் முட்டாள்தனம், யாரும் கறுப்புப் பணத்தை பணமாகவே வைத்திருப்பதில்லை என அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்த திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனாலும் பெருமளவில் கறுப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மறுநாள் 17-ம் தேதி வங்கிகள் இயங்காமல் போனது சாமானியர்களை அதிகம் பாதித்தது. தேசாயின் இந்தத் திட்டத்தைப் பகடி செய்யும் வகையில் அப்போது டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் கார்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமண் ஒரு கார்டூன் வரைந்தார்.

தற்போது பிரதமர் மோடியும் தேசாய் போல அதே நடைமுறையை மீண்டும் கொண்டுவந்திருக்கும் நிலையில் லட்சுமண் 1978 வரைந்த கார்டூன் இன்றும் பொருந்திப் போவதாக சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.
தற்போது பிரதமர் மோடியும் தேசாய் போல அதே நடைமுறையை மீண்டும் கொண்டுவந்திருக்கும் நிலையில் லட்சுமண் 1978 வரைந்த கார்டூன் இன்றும் பொருந்திப் போவதாக சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.