November 20, 2016
பள்ளி மாணவர் கொலை வழக்கில் இரண்டு இளைஞர்கள் கைது!
திருநெல்வேலி அரசு விடுதி மாணவர் கொலை வழக்கில் இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் படுகையூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ், நெல்லை சந்திப்பு ஆதி திராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி, அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
இந்த நிலையில் விடுதியின் வெளியே மர்ம நபர்கள் இரண்டு பேர், வெங்கடேசை சரமாரியாக அரிவாளால் நேற்று வெட்டினர்.
இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேஷ் இறந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தன்னுடன் பயிலும் மாணவியை ஒரு தலையாக காதலித்த விவகாரத்தில் வெங்கடேசுக்கும், மற்றொரு மாணவர் சுந்தருக்கும் இடையே மோதல் இருந்தது தெரியவந்தது.
இதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் சுந்தரும், அவரது நண்பர் செல்வமும் இக்கொலையை செய்தது போலீசார் தரப்பில் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்
பள்ளி மாணவர் கொலை வழக்கில் இரண்டு இளைஞர்கள் கைது!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.