Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 5, 2016

மிஸ்ட்­கோலால் அறி­மு­க­மான பெண் உறவு கொள்ள பணம் கேட்டதால் கொலை



மிஸ்ட்கோல்’ மூலம் அறி­மு­க­மான பெண், உல்­லா­ச­மாக இருக்க பணம் கேட்­டதால் ஆத்­தி­ர­ம­டைந்த நபர் ஒருவர் கல்லால் தாக்கி அப் ­பெண்ணை கொலை செய்­துள்ளார்.

தமி­ழ­கத்தின், சேலம் மாவட்டம் மேச்­சேரி அரு­கே­யுள்ள தெத்­தி­கி­ரிப்­பட்டி ஊராட்சி மோட்டூர் பகு­தியைச் சேர்ந்­தவர் கோவிந்­தம்மாள்(55). கண­வரை பிரிந்து தாயா­ருடன் வசித்து வந்த இவர் மேச்­சே­ரி­யி­லுள்ள தேநீர்­க­டை­க­ளுக்கு பல­காரம் செய்து கொடுத்து வரு­வதை தொழி­லாகச் செய்­துள்ளார்.

இந்­த­நி­லையில் கோவிந்­தம்மாள் கடந்த 21ஆம் திகதி மல்­லி­குந்தம் ஊராட்சி சூரி­யனூர் காட்­டு­வ­லவு ஊஞ்­சக்­காடு என்னும் இடத்தில் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்­யப்­பட்டு சட­ல­மாக கிடந்­துள்ளார்.

இது குறித்து பொலிஸ் இன்ஸ்­பெக்டர் பாஸ்­கரன், சப் இன்ஸ்­பெக்டர் நட­ராஜன் ஆகியோர் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வந்­தனர்.

இத­னைத்­ தொ­டர்ந்து கோவிந்­தம்­மாளின் செல்­போ­னுக்கு வந்த அழைப்­புகள் குறித்து விசா­ரணை நடந்­தது.

இதில் தர்­ம­புரி மாவட்டம் நல்­லம்­பள்ளி ஒன்­றியம் கம்­மம்­பட்டி மலை­யூர்­காடு பகு­தியை சேர்ந்த கட்­டடத் தொழி­லாளி குமார் (42) என்­பவர் கோவிந்­தம்­மா­ளிடம் அடிக்­கடி பேசியமை தெரி­ய­வந்­தது.

இத­னை­ய­டுத்து குமா­ரிடம் பொலிஸார் நடத்­திய விசா­ர­ணையில் அவர் கோவிந்­தம்­மாளை கொலை செய்­ததை ஒப்­புக்­கொண்டார். அதை­யொட்டி பொலிஸார் அவரை கைது செய்­தனர்.

இந்த சம்­பவம் குறித்து குமார் பொலி­ஸா­ரிடம் அளித்த வாக்­கு­மூ­லத்தில், நான் மனைவியை பிரிந்து 4 ஆண்­டு­க­ளாக வெவ்­வேறு இடங்­களில் கட்­டட வேலை செய்து வந்தேன்.

இந்த நிலையில் கடந்த மாதம் எனது செல்­போ­னுக்கு கோவிந்­த­மாளின் செல்போனிலிருந்து ‘மிஸ்ட்கோல்‘ வந்­தது.

இத­னை­ய­டுத்து கோவிந்­த­ம்மா­ளிடம் அடிக்­கடி பேசி வந்தேன்.

இதில் எங்­க­ளுக்குள் பழக்கம் ஏற்­பட்­டது. இரு­வரும் கடந்த 20ஆம் திகதி மாலை மேச்சேரி பஸ் நிலை­யத்தில் சந்­தித்தோம்.

அப்­போது பரோட்­டாவும், மதுவும் வாங்கி வா என கோவிந்­தம்மாள் கூறினார்.

பின்பு இரு­வரும் சூரி­யனூர் காட்­டு­வ­லவு ஊஞ்­சக்­காடு பகு­தியில் ஆட்கள் நட­மாட்டம் இல்­லாத இடத்­துக்கு சென்று அங்கு மது குடித்து விட்டு பரோட்டா சாப்­பிட்டோம். பின்பு உல்­லா­சத்­திற்கு கோவிந்­த­மாளை அழைத்தேன்.

அதற்கு அவள், 500 ரூபா கொடுத்­தால்தான் என்னை தொடு­மா­றும் இல்­லை­யென்றால் என்னை தொடாதே எனவும் உல்­லா­சத்­திற்கு மறுத்தாள்.

நான் மதுவும், பரோட்­டாவும் வாங்கி வந்து விட்டேன், 150 ரூபா மட்­டும் தான் உள்­ளது என கூறினேன்.

அப்­போது பணம் இல்­லாமல் எதற்­குடா வந்தாய்? என கூறி எனது கழுத்தை பிடித்து கோவிந்­தம்மாள் நெரித்தாள்.

நான் மது­ போ­தையில் இருந்ததால் ஆத்­தி­ரத்தில் கோவிந்­தம்­மாளின் தலையில் கல்லால் தாக்­கினேன்.

இதில் அவள் இறந்து விட்டாள் பின்னர் அவள் அணிந்திருந்த அரை­ப்பவுன் தங்க கம்மலை எடுத்துக் கொண்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்று விட்டேன்.

இவ்­வாறு குமார் வாக்­கு­மூலம் கொடுத்­துள்­ள­தாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இத­னை­ய­டுத்து குமாரிடமிருந்து கோவிந்தம்மாளின் தங்க கம்மலை பறிமுதல் செய்த பொலிஸார் குமாரை சிறையில் அடைத்­துள்­ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.