November 28, 2016
நான்கு கணவர்களுக்கு அல்வா!! ஐந்தாவதாக ஒரு இளைஞன்!! பலே லேடி சிக்கியது எப்படி..?
தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நான்கு கணவர்களை ஏமாற்றி விட்டு ஐந்தாவதாக இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் மாலதி(23) என்ற பெண்ணை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று திருப்பூரைச் சேர்ந்த வினோத் என்பவர், தான் மாலதியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மாலதியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில், இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மாலதி, ஸ்டீபன் என்பவரை காதலித்து திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகியுள்ளார். அதற்காக இருவரும் வேளாங்கன்னிக்கு சென்றப்போது அங்கிருந்த டீக்கடைக்காரர் நவநீதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியது தெரியவந்தது.
இதற்காக மாலதி ஸ்டீபன் உடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்ட அதே நேரத்தில், நவநீதனுடன் வாழ்க்கையும் நடத்தி வந்துள்ளார். வேளாங்கன்னியில் நவநீதனுடன் வாழ்ந்து கொண்டிருந்த போது நாகையைச் சேர்ந்த ஒருவருடன் மாலதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் நவநீதனை விட்டுவிட்டு நாகையைச் சேர்ந்த இளைஞருடன் ஓட்டம் பிடித்துள்ளார் மாலதி. இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞருடன் மாலதிக்கு மீண்டும் காதல் ஏற்பட்டுள்ளது.
வினோத் மீது ஏற்பட்ட மோகத்தால் நாகையைச் சேர்ந்த இளைஞரையும் ஏமாற்றி விட்டு வினோத்தை நான்காவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய வாழ்க்கை சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அருமையாக சென்றுள்ளது.
ஒருநாள், இருவரும் திருச்சி சமயபுரம் கோவிலுக்கு சென்றபோது,அவர்களுடன் வினோத்தின் நண்பனான அசோக்கும் சென்றுள்ளார். அப்போது, அசோக்கிற்கும், மாலதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மாலதி வினோத்தை விட்டு பிரிந்து அசோக்கின் வீட்டிற்கு சென்று ஒருவாரம் தங்கியுள்ளார். இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்கிற்கும் மாலதிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த வினோத், அசோக்கிடம் சென்று மாலதியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அசோக் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதன் பின்பு அவர்கள் போலீஸில் புகார் செய்தபோது தான் மாலதியின் சுயரூபம் அவர்களுக்கு தெரிந்தது. மேலும் , போலீஸார் கடந்த 2 நாட்களாக மாலதியின் மற்ற 3 கணவர்களிடமும் விசாரணை நடத்தினர். இறுதியாக வினோத்தும், அசோக்கும் மாலதியை ஏற்று கொள்ளாததால் அவர் சொந்த ஊருக்கே செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் மாலதிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
நான்கு கணவர்களுக்கு அல்வா!! ஐந்தாவதாக ஒரு இளைஞன்!! பலே லேடி சிக்கியது எப்படி..?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.