November 13, 2016
போராட்டத்தின் வழியாக டாஸ்மாக்கை அகற்றிய கிராம மக்கள்
சத்தியமங்கலம் அருகே பூட்டுப் போடும் போராட்டத்தின் எதிரொலியாக டாஸ்மாக் கடை அகற்றப்பட்டதையடுத்து, இனிப்பு வழங்கி கிராம மக்கள் கொண்டாடினர்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள கெம்பநாயக்கன்பாளையம் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து கடையை அப்புறப்படுத்துவதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து கிராமத்தினர் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் இதுவரை டாஸ்மாக் கடை அகற்றப்படாததால்,100க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக அந்த மதுக்கடையை மூடும் நடவடிக்கையில் டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டனர். தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை இனிப்பு வழங்கி பொதுமக்கள் கொண்டாடினர்
போராட்டத்தின் வழியாக டாஸ்மாக்கை அகற்றிய கிராம மக்கள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.