November 10, 2016
தாயை காப்பாற்ற உடலை விற்கும் இளம்பெண்
சீனாவின் காசோயூ நகரில் வசித்து வருபவர் சாயோ மென்கையான். இவரின் தாய் தோல் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். அவரை காப்பாற்ற இளம்பெண் இணையதளத்தில் அறிவித்த விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் 45 வயதான எனது தாய் தோல் புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றார். அவரின் நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது. ஆனால் வறுமையின் காரணமாக எங்களிடம் போதிய பணம் இல்லை. எனது வீட்டில் 5 குழந்தைகள் உள்ளனர். அதில் நான் தான் மூத்தவள் என்பதால் அனைவரையும் பார்க்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக என்னிடம் தேவையான பணம் இல்லை. வேலைக்கு சென்றாலும் கூட என்னால் இந்த தொகையை ஈட்ட முடியாது. அதனால் என்னுடைய உடலை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்-
இந்த பதிவினை பார்த்த சிலர் பண உதவி செய்துள்ளனர். மேலும் பிரபல தொழிலதிபர் ஒருவர் அனைத்து செலவுகளையும் நானே ஏற்று கொள்கிறேன் என பதில் பதிவினை வெளியிட்டுள்ளார்.
தாயை காப்பாற்ற உடலை விற்கும் இளம்பெண்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.