November 5, 2016
தந்தை இறந்துவிட்டதாக கூறி மகன் என்ன செய்தான் தெரியும்மா ..!!
தந்தை இறந்துவிட்டதாக கூறி, ரூ.89 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வர் ராவ் , மஸ்கட்டில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சுதாகர் ஐதராபாத்தில் மருந்தாளுனராக வேலை செய்து வரும் நிலையில் தன்னுடைய தந்தை இறந்துவிட்டதாக கூறி, ஐதராபாத்தை அடுத்த கர்கானாவில் உள்ள வீட்டை ரூ.89 லட்சத்திற்கு அடமானம் வைக்க திட்டமிட்டார்.
இதற்காக தனது கூட்டாளிகளான ராஜ்யலட்சுமி, கிரண், வரபிரசாத், வெங்கட் ரெட்டி, சுதாகர் ரெட்டி, ரகேந்தர், கனகாம்பர ராவ், ஆகியோருடன் சேர்ந்து தந்தையின் இறப்பு சான்றிதழை போலியாக தயாரித்துள்ளார். பின்னர் மேக்மா என்ற நிதி நிறுவனத்தில் சான்றிதழை சமர்பித்து, பணம் பெற முயற்சி செய்ய, அவர்கள் தவணையாக மட்டுமே வழங்க முடியும் என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வெங்கடேஸ்வர் ராவ், ஐதராபாத் காவல்துறையிடம் புகார் அளித்ததையடுத்து, காவல்துறையினர் சுதாகரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், வெங்கடேஸ்வர் ராவிற்கு இரு மனைவிகள் இருப்பதும்,அதனால் ரூ. 5 கோடி மதிப்பிலான தனது சொத்துக்கள் தன் கையை விட்டு போய்விடும் என்ற அச்சத்தில் தான் சுதாகர் மோசடியில் ஈடுபட முயன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தந்தை இறந்துவிட்டதாக கூறி மகன் என்ன செய்தான் தெரியும்மா ..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.