Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 10, 2016

சிவகங்கையில் காவலர்களுடன் கட்டி புரண்டு சண்டை போட்ட இளைஞர்



சிவகங்கையில் சிகிச்சைக்காக அழைத்துவரப்பட்ட இளைஞர் நடுவழியில் போலீசாருடன் கட்டி புரண்டு தகராறில் ஈடுபட்டதால் கயிற்று கட்டிலில் கட்டி தூக்கி சென்று சிகிச்சையளித்தனர்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகேயுள்ள அரசனூரை சேர்ந்த செல்வம் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், திருமாஞ்சோலை பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்த ஸ்டுடியோவிலிருந்து கேமராவை எடுத்து செல்ல முயன்றதால் பொதுமக்கள் செல்வத்தை தாக்கி, அவரை பிடித்து பூவந்தி போலீஸில் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அடித்ததில் காயமடைந்த செல்வத்தை போலீசார் சிவகங்கை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், காவலர்களிடம் தகராறில் ஈடுபட்ட செல்வம் அவர்களையும் தாக்கியுள்ளார்.
தகவலறிந்து வந்த சிவகங்கை போலீசார் செல்வத்தை கயிற்று கட்டிலில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.