November 11, 2016
காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் போராட்டம்
தாரா என்ற திருநங்கை தற்கொலை செய்துகொள்ள காரணமாக இருந்த போலீஸார் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திரு நங்கைகள் போராட்டம் நடத்தினர்.
சென்னை பாண்டிபஜார் காவல் நிலையம் முன்பு நேற்று முன்தினம் தாரா(40) என்ற திருநங்கை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் தரக்குறை வாக திட்டியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக திருநங்கைகள் குற்றம் சாட்டியுள் ளனர்.
எனவே தாரா தற் கொலைக்கு காரணமான பாண்டி பஜார் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 30-க்கும் மேற் பட்ட திருநங்கைகள் நேற்று காலை யில் சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
அத்துடன் அவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமர்ந்து போராட்டம் நடத்த முயன்றபோது லேசான தடியடி நடத்தி கலைக்கப்பட்டனர்.
மேலும், வேப்பேரி போலீஸார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் போராட்டம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 11, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 11, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.