Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 11, 2016

பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பெண்!



வேலூர் அருகே பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த சித்தஞ்சி பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக கன்னியம்மாள் என்ற பெண், கடந்த 30 ஆண்டுகளாக சிறிய பெட்டிகடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

மேலும் இவர் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் வெளியூர்களுக்கு செல்வோரின் வாகனங்களை நிறுத்தி வைக்கும் நிலையத்தினையும் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் வீட்டினுள் தனியாக இருப்பதையறிந்த மர்ம நபர், நேற்றிரவு கன்னியம்மாளை பாலியல் பலாத்காரம் செய்து கொடூர கொலை செய்து தப்பியோடியுள்ளார்.

இது குறித்து  அவளூர் காவல் துறையினர் தடயவியல் சோதனை மேற்கொண்டனர்.

மேலும் சம்பவ இடத்தில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.