500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் கருப்பு பண முதலைகள் அவதிப்படுகிறார்களோ இல்லையோ சாதாரண பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த அறிவிப்பையெட்டி நாடு முழுவதும் 55 பேர் பலியாகியுள்ளனர்.
அன்றாட வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கின்றனர் மக்கள்.
ஆனால் மக்களின் துயரை கொஞ்சம் கூட நினைத்துப்பார்க்காமல் இது குறித்த கேள்விக்கு கிண்டலும் கேலியுமாக பதில் கூறியிருக்கிறார் பாஜக ஆதரவாளரான யோகா சாமியார் பாபா ராம்தேவ். 500, 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்ததால் மக்கள் மாற்று வழியில்லாமல் உணவில்லாமல் தவிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பாபா ராம்தேவ், போர் சமயத்தில் நம் இராணுவ வீரர்கள் ஏழு நாட்கள், எட்டு நாட்கள் உணவின்றித் தவிக்கின்றனர். நாமும் அதுபோல நம் நாட்டுக்காகச் செய்ய முடியாதா? என கொஞ்சம் கூட நெஞ்சில் ஈரமில்லமல் பேசியிருக்கிறார். மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இந்த வேளையில் பாஜக தலைவர்களுள் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி பெங்களூருவில் தன் மகள் திருமணத்தை பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும்வண்ணம் நடத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்த அவர், பாஜகவில் இருக்கும் பலர் பிரம்மச்சாரிகள்.
அதனால் இது கல்யாண சீசன் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த நடவடிக்கையை பதினைந்து நாட்களோ அல்லது ஒரு மாதமோ கழித்து அமல்படுத்தியிருந்தால், மக்கள் இவ்வளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். இதனால் ஏற்படும் ஒரே நல்ல விஷயம், மக்கள் வரதட்சணை கேட்க முடியாது என சிரித்துக்கொண்டே கூறினார்.
இங்கு பல்வேறு சுப காரியங்களை நடத்த முடியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். பேத்தியின் கல்யாணத்தை நடத்த முடியாதோ என்ற தவிப்பில் மரணமடைந்த சம்பவம் கூட நடந்திருக்கிறது.
ஆனால் மக்கள் படும் துயரில் பாபா ராம்தேவுக்கு கிண்டல் பேச்சும் கேலி பேச்சும் பேச தோன்றுகிறது


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.