Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 7, 2016

குடிசை மாற்று வாரிய அதிகாரிகளின் அலட்சியம்



சேலத்தில்  குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு அடிப்படை வசதிகள் இன்றி இருப்பதால் பயனாளிகள்  அதனை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. தங்களின் கனவுகளாக  விளங்கிய வீடுகள் பயன்பாடின்றி புதர்மண்டி கிடப்பதை நினைத்து ஏழை மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காண்போம்.
ஓலை குடிசையில் பல்வேறு கனவுகளுடன் வாழ்ந்து வந்தவர்களின் வாழ்வாதார நிலையினை மேம்படுத்த, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் சேலம் மாவட்டம் பெரிய கொல்லப்பட்டியில் 2015ஆம்  ஆண்டு கட்டப்பட்ட பிரம்மாண்ட குடியிருப்பு. இந்த குடியிருப்பில் 229 வீடுகள் இருந்தாலும்  60 வீடுகளில் மட்டும்  மக்கள் குடியிருந்து வருகின்றனர். மற்ற வீடுகள் அனைத்து பூட்டிய நிலையிலேயே உள்ளது. பார்ப்பதற்கு கண்களை கவர்வது போல் இருந்தாலும் உள்ளே சென்று வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 229 வீடுகளில்,பெரும்பாலான வீட்டிற்கும் இதுவரை மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. மின் இணைப்பு இல்லாத வீட்டில் வசிப்பது  கற்கால வாழ்க்கை வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். சாக்கடை வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசு நல்ல நோக்கத்தில் வீடு கட்டிக் கொடுத்தாலும், அதனை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் வரை பொறுப்பாக பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள், தங்களுடைய கோரிக்கைகளை ஏற்க மறுப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். குடிநீர் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகள்கூட  முறையாக இல்லாமல் தவித்து வருவதாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது.
அடிப்படை வசதிகள் இல்லாததால் ஏழை மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியேறாமல் வேறு வீடுகளுக்கு வாடகைக்கு செல்கின்றனர். இதனால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட  வீடுகள் பாரமரிப்பு இன்றி புதர் மண்டி உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.  இந்த நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு முறையாக பணம் காட்டாத காரணத்தால் மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து தரவில்லை என விளக்கம் அளித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.