November 13, 2016
வாழ்க்கை ஒரு வட்டம் என்பது உண்மையாகியது. சில்லறைக்காக பிச்சைக்காரனிடம் கெஞ்சிய கோடீஸ்வரன்
இதுநாள் வரை கோடீஸ்வரர்களிடமும், லட்சாதிபதிகளிடமும் பிச்சைக்காரர்கள் கெஞ்சித்தான் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் பிரதமர் மோடியின் அதிரடி அறிவிப்பு காரணமாக கோடீஸ்வரர் ஒருவர் பிச்சைக்காரரிடம் சில்லறைக்காக கெஞ்சியுள்ள தகவல் வெளிவந்துள்ளது.
டெல்லியில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவர், பெங்களூரில் உள்ள தனக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தை இங்கிலாந்து நிறுவனம் ஒன்றுக்கு லீசுக்கு விட முடிவு செய்துள்ளார். நேற்றுடன் தொழிலாளர்களின் சம்பள கணக்கை செட்டில் செய்துவிட்டு இன்று முதல் இங்கிலாந்து நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் நேற்று தொழிலாளர்களுக்கு சம்பளம் போட அவரிடம் பணம் இல்லை. இருப்பதெல்லாம் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள்தான். அதை தொழிலாளர்கள் வாங்க மறுத்துவிட்டதால் அவர் கதிகலங்கி போனார்.
இந்நிலையில் பிச்சைக்காரர்களிடம் சில்லறை இருக்கும் என்று ஒருவர் கூறிய ஆலோசனையின்பேரில் பிச்சைக்காரரிடம் கெஞ்சியபடி சில்லறை கேட்டார். பின்னர் ஒருவழியாக பிச்சைக்காரர்களின் தலைவர் ரூ.2.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு ரூ.90,000 மட்டும் சில்லறை கொடுத்தனர். அதன்பின்னர் தான் அந்த தொழிலதிபர் நிம்மதி பெருமூச்சு விட்டாராம்
இதுதான் வாழ்க்கை ஒரு வட்டம் என்பது.
வாழ்க்கை ஒரு வட்டம் என்பது உண்மையாகியது. சில்லறைக்காக பிச்சைக்காரனிடம் கெஞ்சிய கோடீஸ்வரன்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 13, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 13, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.