November 24, 2016
சிறுமியைக் திருமணம் செய்ய முயன்றவருக்கு காவல்துறை அதிகாரி உடந்தை
விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற நபர் ஒருவருக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் உடந்தையாகச் செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் வசிக்கும் செல்வி என்பவரின் மூன்றாவது மகளான தேவிகா லட்சுமியை பெண் கேட்டு, டி.எடப்பாளையும் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் குடும்பத்தினர் வந்துள்ளனர். எனினும், மகளுக்கு 17 வயதுதான் ஆகிறது என்றும், தற்போது திருமணம் செய்ய விரும்பவில்லை என்றும் அவரது தயார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வரும் 27ம் தேதி திருமணம் நடைபெறும் என பத்திரிகை அடித்து, திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் சங்கர் வீட்டார் மேற்கொண்டுள்ளனர். இது குறித்து புகார் அளிப்பதற்காக செல்வி, தனது 3 மகள்களுடன் விழுப்புரம் மகளிர் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது, மணமகன் வீட்டாருக்குச் சாதகமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள், தேவிகா லட்சுமியின் சகோதரி லாவண்யாவின் கையில் இருந்த செல்போனை பிடுங்கி அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் லாவண்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியைக் திருமணம் செய்ய முயன்றவருக்கு காவல்துறை அதிகாரி உடந்தை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.