Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 23, 2016

விவிஎம் கல்வி அறக்கட்டளை வழங்கும் இலவச ஐஏஎஸ் பயிற்சி



விவிஎம் கல்வி அறக்கட்டளை (VVM Educational Trust) மூலம் வழங்கப்படும் இலவச ஐஏஎஸ் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான நேர்முகத் தேர்வு நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
ஐஏஎஸ் மற்றும் தமிழ்நாடு அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு விவிஎம் கல்வி அறக்கட்டளை சார்பாக இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. இந்த வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, கடந்த 13 ஆம் தேதி திசையன்விளை விவிஎம் பொறியியல் கல்லூரியில் நுழைவுத்தேர்வு நடைபெற்றது.
இதில் பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் தேர்ச்சி பெற்ற 72 மாணவர்களுக்கு நேற்று பாளையங்கோட்டையில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது. இந்த நேர்முகத்தேர்வில் வெற்றி பெறும் 45  மாணவர்களுக்கு விவிஎம் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச ஐஏஎஸ் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.