Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 6, 2016

உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு நஷ்டஈடு - வைகோ வலியுறுத்தல்



காவிரி டெல்டா மாவட்டத்தில் உயிரிழந்த மூன்று விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரிப் பாசனப் பகுதிகளில் போதிய தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால், விவசாயிகள் மூவர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு, மத்திய அரசு ஆகியவை தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாகவும் வைகோ குற்றம்சாட்டினார். விவசாயிகளின் உயிரிழப்பு, காவிரி டெல்டாவின் அவல நிலையை உணர்த்துகிறது என தெரிவித்தார்.
தமிழக விவசாயிகளின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களையும் பாரபட்சமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டார். உயிரிழந்த விவசாயிகள் கோவிந்தராஜ், அழகேசன், ராஜேஸ் கண்ணன் ஆகியோர் குடும்பத்தினருக்கு தமிழக அரசு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.