Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 29, 2016

மனைவி கொடுத்த தகவலின் அடிப்படையில் பெங்களூருவில் வங்கிப் பணத்துடன் மாயமான டிரைவர் கைது



பெங்களூருவில் கடந்த 23ம் தேதி வங்கிப் பணத்துடன் மாயமான டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி அளித்த தகவலின் அடிப்படையில்  டோமனிக்கை போலீசுார் கைது செய்தனர். பெங்களூருவில் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுத்துச் சென்ற வேனை அதன் ஓட்டுநரே கடந்த 23ம் தேதி கடத்தி  சென்றார்.
தலைமறைவான அவரை தேடி வரும் நிலையில், அவரது மனைவி அளித்த தகவலின் அடிப்படையில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக  அவரது மனைவி நேற்று போலீசில் சரணடைந்தார். பெங்களூருவில் கடந்த 23ம் தேதி ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்ப தனியார் நிறுவனம் 1.37 கோடியுடன்  வாகனத்தில் அதன் ஊழியர்கள் பலத்த பாதுகாப்புடன் சென்றனர். பெங்களூரு கே.ஜி சாலையில் உள்ள வங்கி ஏடிஎம். மையம் அருகே வாகனம் நிறுத்தப்பட்டது.
பின்னர், காவலர் மற்றும் பணம் நிரப்பும் ஊழியர் ஏ.டி.எம்.  மையத்திற்குள் சென்றனர். இதை பயன்படுத்திக்கொண்ட டிரைவர் 1.37 கோடியை எடுத்துக்கொண்டு  வாகனத்துடன் தலைமறைவானார். அன்று மாலை வசந்த் நகரில்  உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரி அருகே வாகனத்தை நிறுத்திவைத்து 45 லட்சத்தை விட்டுவிட்டு  மீதமுள்ள 92 லட்சத்துடன் தலைமறைவானார். மறுநாள் போலீசார்  டிரைவர் விட்டுச்சென்ற வாகனம், 45 லட்சம் மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், தனிப்படை அமைத்து  92 லட்சத்துடன்  தப்பிச்சென்ற டிரைவரை வலைவீசி தேடிவந்தனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்த மறுநாள் டிரைவர் டோமினிக்  மனைவி எல்வின் மேரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் டிரைவரின் மனைவி  பெங்களூரில் இருந்து சென்னைக்குச்சென்று அங்கு தனது தங்கை  மற்றும் தங்கையின் கணவரிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். பின்னர், வேலூர் மற்றும்  பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துவந்த எல்வின்மேரி நேற்று அதிகாலை  பானஸ்வாடி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர்  கூறினார். பின்னர் சரண் அடைந்தவர் கொடுத்த தகவலின் பேரில்  அவரிடமிருந்து போலீசார் 79.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து மீதமுள்ள 12.20 லட்சம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் டிரைவர் டோம்னிக்கை பிடிக்க தனிப்படை அமைத்து வலைவீசி   தேடிவருகின்றனர்.போலீசில் சரண் அடைந்த எல்வின்மேரி வாக்குமூலம்:சரண் அடைந்துள்ள எல்வின் மேரியிடம் விசாரணை நடத்தியபோது, எனது கணவர்  டோம்னிக் ஏடிஎம் மையங்களில் நிரப்பவேண்டிய பணத்தை கொண்டுவந்தார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த நாள் சித்தூர், வேலூர் மார்க்கமாக சென்னையை  சென்றடைந்தோம். இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து கேட்டேன். ஆனால், அவர் பதில் கூற மறுத்துவிட்டார். இதனால், பீதி அடைந்த நாங்கள்  கோயம்புத்தூருக்கு சென்று அங்கிருந்து கேரளாவுக்கு சென்றோம், பின்னர், ரூ.79.80  லட்சத்தை என்னிடம் கொடுத்துவிட்டு, வருவதாக கூறி சென்றார். அன்று முதல் அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பின்னர், கேரளாவில் ஒரு நாள் தங்கிவிட்டு நேராக பானஸ்வாடி, லிங்கராஜபுரத்தில் உள்ள என்  தாய் வீட்டுக்கு சென்றேன். அங்கிருந்து தவறு என உணர்ந்த நான் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளேன் என்று எல்வின் மேரி போலீசாரிடம் கூறினார் என  போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். அவரை கைதுசெய்வதற்கு  முன் எல்வின் மேரியின் குழந்தையை உறவினர்களிடம் விட்டுவரும் படி போலீசார் கூறியுள்ளனர்.  ஆனால், தனது மகளை தன்னுடனே இருக்கவேண்டும் எனக்கூறி  தன்னுடனே எல்வின் மேரி கூறியுள்ளார். எனவே, அவரின் 10 வயது மகள் எல்வின் மேரியுடனே  இருக்க போலீசார் அனுமதித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.