Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 30, 2016

அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பளப் பணத்தை எடுப்பதில் சிக்கல்!



அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு வரும் 1-ம் தேதி, முழுமையாக சம்பளப் பணத்தை கொடுக்க முடியாத நிலையில் வங்கிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8 ஆம் தேதி அறிவித்தது. அதனையடுத்து வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம் என விதிமுறைகளை விதித்தது.

இந்த உத்தரவும் நேற்று தளர்த்தப்பட்டது. ஆனால், புதிய ஐநூறு மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளிடம் போதிய அளவு கையிருப்பில் இல்லாததால், வரும் 1ம் தேதி சம்பள பணத்தை எடுக்க வரும் ஊழியர்களுக்கு பணம் வழங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே, இன்றைய தினமே வங்கிக்கு பணம் பெற வந்த ஓய்வூதியதாரர்கள் பலரும் போதிய அளவு பணம் எடுக்க முடியாததால் அதிருப்தி அடைந்தனர். நாளைய தினம் தங்களுக்கான ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ள நிலையில், வங்கிகள் போதிய அளவு பணம் தர முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.