Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 18, 2016

கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது!



ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கை பலமுறை பாதிக்கப்பட்டது.  மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை இன்று காலை கூடியதும், ரூபாய் மாற்றம் விவகாரத்தால், பொது மக்கள் சந்திக்கும் துயரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என சபாநாயகரிடம், காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் வலியுறுத்தினார்.

எனினும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. மதியம் 12.30 மணியளவில் மீண்டும் அவை கூடிய போதும் அமளி நீடித்ததை அடுத்து, நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

ரூபாய் நோட்டு விவகாரம் மாநிலங்களவையிலும்  எதிரொலித்தது. காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவைத்தலைவர் இருக்கும் இடத்திற்கு அருகே சென்று கோஷங்களை எழுப்பினர்.

இதன் காரணமாக ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து முதலில் 11.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், பேசிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் ஆகியோர் ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பான விவாதத்தில் பிரதமர் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதை ஆதரித்து உறுப்பினர்கள் தொடர்ந்த அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.