November 5, 2016
அரசு மதுபான கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை!
நாகர்கோவிலில் அரசு மதுபான கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
பார்வதிபுரத்தில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்த கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், விலை உயர்ந்த மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ஒரு லட்ச ரூபாய் என கூறப்படுகிறது.
மேலும் கடைக்கு வெளியே மதுபான பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. ஏற்கனவே இந்த கடையில் 5 முறை மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அரசு மதுபான கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 05, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.