Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 29, 2016

தாய், தந்தையை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த மகன் ..! – ஏன் தெரியுமா..? அதிரவைக்கும் பின்னணி காரணி..!



தேவகோட்டையில் தாய், தந்தையை அரிவாளால் வெட்டிக்கொலை
செய்துவிட்டு தப்பியோடிய மகனை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, ராம்நகரை சோ்ந்தவா் மகாலிங்கம். இவா் ஓய்வு பெற்ற வட்டாச்சியா். இவரது மனைவி சுசிலாவும் ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு சந்தானம் என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூவருக்கும் திருமணமான நிலையில், அனைவரும் தேவகோட்டையிலேயே தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். மகன் சந்தானம் ராம்நகர் பகுதியிலேயே கோழிக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தொழிலில் நடத்த தனது தாய், தந்தையிடம் பணம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று தனது தந்தை வீட்டிற்கு வந்த சந்தானம் பணம் கேட்டபோது, பெற்றோர் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தானம் அருகில் இருந்த அரிவாளை எடுத்து, தாய், தந்தையை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

வீட்டின் வேலையாள், கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் இடத்திற்கு வந்த காவல்துறையினா், கொலை செய்யப்பட்டு கிடந்த தம்பதியினரை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய சந்தானத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.