Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 14, 2016

இன்று குழந்தைகள் தினம்..! நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது..! மாணவியின் ஓவியத்தை டூடுலாக மாற்றிய கூக



இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, கூகுள் சிறப்பு டூடுல் ஒன்றை உருவாக்கியுள்ளது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14ஆம் தேதியை, குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். நேரு குழந்தைகள் மீது அதிக அன்பு காட்டியதன் காரணமாக, இந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.
இதனையடுத்து நேருவின் நினைவாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், இன்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இந்த நிலையில் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில், கூகுள் நிறுவனம், டூடுல் ஒன்றை சேர்த்துள்ளது.

”டூடுல் ஃபார் கூகுள் ” என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில், புனே நகரத்தின் பலேவாடி பகுதியில் உள்ள விப்ஜியார் உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த அன்விதா பிரசாந்த் டெலங்(11) என்ற மாணவி வெற்றி பெற்றார். இதனையடுத்து அவரது ஓவியத்தை டூடுலாக இணையத்தில் சேர்த்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.