Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 11, 2016

சில்லறை இல்லாததால் இரண்டாவது நாளாக ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகள்!



தொடர்ந்து இரண்டாம் நாளாக நூறு ரூபாய் தாள்கள் இல்லாததால் ஏராளமான ரயில் பயணிகள், சென்டிரல் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

500, 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூர் செல்ல ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் தங்களிடம் இருக்கும் பணத்தாள்களையே எடுத்து வரும் நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக ரயில் நிலைய பயணச்சீட்டு மையங்களில் உள்ள ஊழியர்கள் பயணிகளுக்கு நூறு ரூபாய் தாள்களை அளிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வெளியூர் செல்வதற்காக அவசரப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் தங்களுக்கு சில்லறை தொகை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்ததாகவும், இந்நிலையில் இங்கும் தங்களை திருப்பி அனுப்புவதாக பெரும்பாலான பயணிகள் கவலை தெரிவித்தனர்.

மேலும் ரயில்வே நிர்வாகம் 50 மற்றும் 100 ரூபாய் தாள்களை அதிக அளவில் வங்கிகளில் பெற்று கையிருப்பில் வைக்க வேண்டும் என்றும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.