Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 13, 2016

மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன்: ஜெ. அறிக்கை


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இச்கிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு பேரதாரவை தர வேண்டும் என்றும் மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் என்றும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 50 நாட்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் அவர் பெயரில் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களின் பேரன்பு இருக்கும்போது எனக்கு எந்த குறையும் இல்லை; இறைவனின் திருவருளாள் விரைவில் நலம் பெறுவேன். மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன். வெகுவிரைவில் முழுமையாக நலம் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருக்கிறேன். 

உலகம் வியக்கும் உன்னத திட்டங்கள் பல தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு அன்பையும் பேராதரவையும் வாக்காள பெருமக்கள் தர வேண்டும். ஓய்வு என்பது நான் அறியாதது; உழைப்பு என்னை விட்டு நீங்காதது. எனக்காக அதிமுகவினர் உயிரை மாய்த்தது வேதனை தருகிறது. என்னுடைய எண்ணம், இதயம் எப்போதும் உங்களுக்காகவே இருக்கும் என தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.