
சிறிலங்காவில் போர் ஓய்வின் பின்னரான காலப்பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய, இராணுவம் மற்றும் பொலிஸ் துறையை சார்ந்தவர்களுக்கு வீசா வழங்க சர்வதேச நாடுகள் நிராகரித்து வருகின்றன.
மாணவி வித்தியா கொலையுடன் தொடர்புடைய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு வீசா வழங்க அவுஸ்திரேலியா மறுத்துள்ளது.
வித்யா படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பிரதான சந்தேகநபரை விடுவிக்குமாறு பொலிஸாருக்கு ஆலாசனை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக, அவுஸ்திரேலியாவுக்கு சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் தனது மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்து வீசா கோரி, லலித் ஜயசிங்க விண்ணப்பித்திருந்தார்.
எனினும் வித்தியா கொலை வழக்கின் அடிப்படையில் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனையடுத்து வீசா நிராகரிக்கப்பட்டுள்ளது.
17 வயதுடைய மாணவி வித்யா 2015 மே மாதம் 13ஆம் திகதி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு கொலை செய்யப்பட்டார்.
அதன் பிரதான சந்தேகநபரான மஹாலிங்கம் சசிக்குமார் எனப்படும் சுவிஸ் குமார் என்பவர் பிரதேச மக்களினால் பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டி வைக்கப்பட்ட போதிலும், அப்போதைய யாழ் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட லலித் ஜயசிங்கவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் குழுவொன்றினால் அவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் கிளிநொச்சி வரை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இரகசியமாக அழைத்து வரப்பட்டு கொழும்பிற்கு தப்பி செல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
இதனால் கடுமையான கோபமடைந்த பிரதேச மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டமையினால் மீண்டும் சுவிஸ் குமார் வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.