Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

November 28, 2016

மோடியின் அறிவிப்பால் நாடே அழிவை சந்தித்துள்ளது மாயாவதி கடும் தாக்கு



லக்னோ : பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததால் நாடே பெரிய அழிவை சந்தித்துள்ளது என  பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் ,எம்.பியுமான மாயாவதி குற்றம் சாட்டினார்.
பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். கறுப்பு பணம், வரி ஏய்ப்பு , ஊழல் ஆகியவற்றை முற்றிலும் ஒடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மோடி கூறினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி, நாடே பேரழிவை சந்தித்திருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு கடந்த 8ஆம் தேதி தடை விதித்ததால்,நாடு முழுவதும் பெறும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளனது. இந்நிலையில் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போதுஅவ்ர கூறுகையில், பிரதமர் மோடி ரூபாய் நோட்டு  குறித்த அறிவிப்பால், நாட்டில் பொருளாதா அவசர நிலையை பிரகடனப்படுத்தி விட்டார்.. மோடியின் இந்த ரூபாய் நோட்ட அறிவிப்பால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.மேலும் பா.ஜ.கவினர் பகுஜன் சமாஜ் கட்சியினர் மீது ஆதாரமற்ற புகார்களை தெரிவித்து வருகிறார்கள்.வரும் உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு முக்கிய சவாலாக இருக்கும் . இவ்வாறு கூறினார்.
மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் நாடே பேரழிவவை சந்தித்திருப்பதாக கூறிய மாயாவதி, தனது தவறை சரி என நம்ப வைக்க மோடி கண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.